தமிழகம்

உசிலம்பட்டியில் நேதாஜியின் 127வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

57views
இந்திய விடுதலைக்குப்பாடுபட்டவரும் சுதந்திர போராட்ட வீரருமான நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 127வது பிறந்த நாள் விழா தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இன்று கொண்டாடப்பட்டு வருகின்றது.இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தேவர் சிலை முன்பு அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் சார்பில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 127 ஆவது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.இப்பிறந்தநாள் விழாவில் மதுரை மாவட்ட பொதுச் செயலாளர் ஐ.ராஜா தலைமையில் நேதாஜி திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.மேலும் நாம்தமிழர் கட்சி சார்பில் மாநில கொள்கை பரப்புச் செயலாளர் சிவசங்கர் தலைமையில் கட்சியினர் நேதாஜியின் திருஉருவப்படத்திற்கு பூப்போட்டு மரியாதை செலுத்தினர்.
செய்தியாளர் : உசிலை சிந்தனியா

Right Click & View Source is disabled.

error: Content is protected !!