தமிழகம்

சோழவந்தானில் சுதந்திர போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போசை மறந்த அரசியல் கட்சியினர் சமூக ஆர்வலர்கள் வேதனை

181views
மதுரை மாவட்டம் சோழவந்தானில் சுதந்திரப் போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் முழு திருஉருவச் சிலை பேருந்து நிலையம் அருகே உள்ளது. மூக்கையா தேவர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஆகியோர் சிலைகளுக்கு மத்தியில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சிலை உள்ளது. கடந்த காலங்களில் தேவர் ஜெயந்தி மருதுபாண்டியர் ஜெயந்தி போன்ற நாட்களில் மூன்று சிலைகளுக்கும் திமுக அதிமுக உள்ளிட்ட அரசியல் கட்சியினரும் சமுதாய அமைப்புகளும் மாலை அணிவித்து மரியாதை செய்து வருவார்கள். குறிப்பாக தேர்தல் காலங்களில் திரளான அரசியல் கட்சியினர் மரியாதை செய்வார்கள்.
இந்நிலையில் நேற்று சுதந்திரப் போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் பிறந்தநாள் விழா இந்தியா முழுவதும் மட்டுமல்லாமல் உலகின் பல்வேறு இடங்களில் கொண்டாடப்பட்டது. ஆனால் சோழவந்தானில் உள்ள திரு உருவ.சிலைக்கு எந்த ஒரு அரசியல் கட்சியும் மாலை அணிவிக்கவில்லை. அந்தப் பகுதியில் . இது சுதந்திரப் போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் தியாகத்தை உதாசீனம் செய்வது போல் உள்ளது. சமுதாய அமைப்புகளும் தாங்கள் அரசியல் செய்வதற்கு சுபாஷ் சந்திர போஸ் தேவையில்லை என்று நினைத்தது போல் அவரது தியாகத்தை மறந்து விட்டனர். இனி வரும் காலங்களில் அரசு நிர்வாகத்தின் மூலம் உரிய மரியாதை சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு செய்யப்பட வேண்டும் என்று இப்பகுதி சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!