தமிழகம்

நெல்லையில் தேசிய நுகர்வோர் உரிமை தின விழா; விழிப்புணர்வு போட்டிகள்

195views
நெல்லையில் தேசிய நுகர்வோர் உரிமை தின விழா மற்றும் விழிப்புணர்வு போட்டிகள் நெல்லை அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் சிவ சத்தியவள்ளி தலைமையில் நடந்தது. இதில் நுகர்வோர் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தப்பட்டது. தமிழ்நாடு அரசு உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை திருநெல்வேலி மாவட்டம், திருநெல்வேலி அரசு அருங்காட்சியகம் இணைந்து தேசிய நுகர்வோர் உரிமை தின விழிப்புணர்வு பேச்சுப்போட்டி, கட்டுரை, ஓவிய போட்டிகள் நடைபெற்றது. ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவ மாணவியருக்கு போலி விளம்பரமும், நுகர்வோர் நிலையும் என்ற தலைப்பில் ஓவியப்போட்டியும், ஒன்பது முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவ மாணவியர்களுக்கு தூண்டில் விளம்பரமும் நுகர்வோர்களும் என்ற தலைப்பில் கட்டுரை போட்டியும், நுகர்வோர் உரிமை கடமை என்ற தலைப்பில் கல்லூரி மாணவ மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி ஆகிய விழிப்புணர்வு போட்டிகள் நடைபெற்றது.
நிகழ்விற்கு அரசு அருங்காட்சியக காப்பாட்சியர். சிவ சத்தியவள்ளி தலைமையேற்று அனைவரையும் வரவேற்றார். தமிழ்நாடு மக்கள் நுகர்வோர் பேரவை மாநில தலைவர் வழக்கறிஞர் எஸ். ஜாபர் அலி போட்டிகளை தொடங்கி வைத்தார். திருநெல்வேலி மாவட்ட நுகர்வோர் விழிப்புணர் இயக்க பொதுச் செயலாளர் கவிஞர் கோ கணபதி சுப்ரமணியன், நுகர்வோர் உரிமை, கடமை, தர முத்திரைகள் போன்றவை குறித்து சிறப்புரையாற்றினார். நிகழ்வில் திருநெல்வேலி மாவட்ட நுகர்வோர் உரிமை பாதுகாப்பு சங்க பொருளாளர் கவிஞர் சு. முத்துசாமி கருத்துரை வழங்கினார். போட்டிகளுக்கு நடுவர்களாக கவிஞர் சுப்பையா, ம.தி.தா. இந்து கல்லூரி கலை ஆசிரியை சொர்ணம் ஆகியோர் செயல்பட்டனர்.
பணி நிறைவு பெற்ற துணை ஆட்சியர். தியாகராஜன் வாழ்த்துரை வழங்கினர். பேச்சுப்போட்டியில் முதல் பரிசு தூய சவேரியார் கல்லூரி மாணவர் அண்ணாமலை, இரண்டாவது பரிசு தூய சவேரியார் கல்வியல் கல்லூரி மாணவர் மாரியப்பன், மூன்றாவது பரிசு ராணி அண்ணா மகளிர் கல்லூரி மாணவி நந்தினி, ஓவிய போட்டியில் முதல் பரிசு புனித இன்னாசியார் மேல்நிலைப்பள்ளி மாணவி சிவமகா, இரண்டாவது பரிசு திரு தாயுமான சுந்தர நடுநிலைப்பள்ளி இசக்கி தாய், மூன்றாவது பரிசு குழந்தை யேசு பெண்கள் பள்ளி மாணவி பி சுயம்பு வைஷ்ணவி, பேச்சுப்போட்டி முதல் பரிசு புனித இன்னாசியார் மேல்நிலைப்பள்ளி மாணவி பி.ஷோபனா, இரண்டாவது பரிசு சங்கர் மேல்நிலைப்பள்ளி மாணவி பெ.கவி பாலா, மூன்றாவது பரிசு சங்கர் மேல்நிலைப்பள்ளி மாணவி ஆ. சித்ரா ஆகிய மாணவ மாணவியருக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் 26 ஆம் தேதி திங்கட்கிழமை மாலை 4 மணிக்கு பரிசுகளை மாவட்ட ஆட்சியர் வே.விஷ்ணு வழங்க உள்ளார்.
நிகழ்விற்கான ஏற்பாடுகளை மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை அலுவலர் ப. வள்ளிக்கண்,நேர்முக உதவியாளர், தாசில்தார். கனகராஜ் ஆகியோர் செய்திருந்தனர்.
செய்தியாளர் : அபுபக்கர்சித்திக், தென்காசி

Right Click & View Source is disabled.

error: Content is protected !!