தமிழகம்

உசிலம்பட்டி அருகே செம்பட்டி பகுதியில் நெல் கொள்முதல் மையம் அமைக்க அரசு காலம் தாழ்த்தி வருவதால் களத்தில் வீணாகும் நெல்மணிகள்;.விவசாயிகள் வேதனை

142views
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள செம்பட்டி கன்னியம்பட்டி , ராமநாதபுரம் , கட்டத்தேவன்பட்டி, கள்ளபட்டி,மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம மக்கள் சுமார் 1000க்கும் மேறப்பட்ட ஏக்கரில் நெல் பயிரிட்டுள்ளனர்.இப்பகுதி மக்கள் நெல்களை சுமார் 10 கி.மீ தொலைவிலுள்ள செல்லம்பட்டியிலுள்ள அரசின் நெல் கொள்முதல் மையத்திற்கு சென்று விற்பனை செய்து வந்தனர்.தூரம் அதிகமாக இருப்பதால் தங்கள் பகுதியிலேயே அரசின் நெல் கொள்முதல் மையம் அமைக்க வேண்டுமென அரசிடம் கோரிக்கை விடுத்து வந்தனர்.இதனையடுத்து அதிகாரிகள் தரப்பில் செம்பட்டியில் விரைவில் நெல் கொள்முதல் மையம் அமைக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனை நம்பிய கிராமக்களும் நெற்பயிர்களை அறுவடை செய்து விற்பனை செய்யாமல் கிராமத்திலுள்ள களத்தில் (பொது இடத்தில்) நெல்களை குவித்து வைத்துள்ளனர்.ஆனால் இதுவரை அரசு சார்பில் நெல் கொள்முதல் மையம் அமைக்க எந்த முயற்ச்சியும் மேற்க்கொள்ளப்படவில்லை.இதனால் விவசாயிகள் அறுவடை செய்து வைத்திருந்த நெல் பயிர்கள் மழையிலும் வெயிலிலும் கிடந்து சேதமடைந்து போவதை கண்டு அப்பகுதி விவசாயிகள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். இதற்கு தமிழக அரசு; உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செய்தியாளர் : உசிலை சிந்தனியா

Right Click & View Source is disabled.

error: Content is protected !!