தமிழகம்

தேசிய நுகர்வோர் தினத்தை முன்னிட்டு, ராஜபாளையத்தில் நடைபெற்ற மாவட்ட அளவிலான ஒரு நாள் விழிப்புணர்வு கருத்தரங்கில் 50 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

197views
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் உள்ள வியாபார சங்க கட்டடத்தில், தேசிய நுகர்வோர் தினத்தை முன்னிட்டு மாவட்ட அளவிலான ஒரு நாள் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு அலுவலரும், மாவட்ட வழங்கல் அலுவலருமான மாரிமுத்து தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மாவட்டம் முழுவதிலும் இருந்து 100 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியின் தொடக்கத்தில் பல மாவட்டங்களில் சிறப்பாக பணியாற்றிய கிளை நிர்வாகிகளுக்கு, சிறப்பு விருந்தினர்கள் விருது வழங்கி பாராட்டினார்கள்.
பின்னர் நடந்த விழிப்புணர்வு கருத்தரங்கில், நுகர்வோர் தினம் தொடங்கப்பட்டதன் நோக்கம் குறித்தும், நுகர்வோர் கடமைகள் மற்றும் நுகர்வோர் உரிமைகள் குறித்தும், நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின் முக்கிய அம்சங்கள் குறித்தும், புகார் அளிக்கும் இடம் குறித்தும், நிவாரணம் பெறும் வழிமுறைகள் குறித்தும் விளக்கம் சிறப்பு விருந்தினர்கள் அளித்தனர்.
உணவு பொருட்களில் கலப்படம் செய்யும் மற்ற பொருட்கள் குறித்தும், அதனால் மனிதர்களுக்கு உண்டாகும் பக்க விளைவுகள் குறித்தும், வியாபார இடங்களில் உள்ள பொருட்களில் தரமான பொருட்களை கண்டறிவது குறித்தும் செயல் முறை விளக்கம் அளிக்கப்பட்டது.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!