சினிமா

கே.முரளீதரன் நினைவஞ்சலி

80views
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவரான கே.முரளீதரன் அவர்களின் நினைவஞ்சலியில் திரை உலக பிரமுகர்கள் கலந்துகொண்டு மலரஞ்சலி செலுத்தினர்.
” எல்.எம்.எம்.என்று எல்லோராலும் அழைக்கப்பட்டவர்தான் கே.முரளிதரன். தயாரிப்பாளர் சங்கத்தில் பொருளாளராகவும், பின்னர் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டு சிறப்பாக செயலாற்றியவர்.
அரண்மனை காவலன், வேலுச்சாமி, மிஸ்டர் மெட்ராஸ், புதுப்பேட்டை , அன்பே சிவம், சகலகலாவல்லவன், உன்னைத் தேடி, வீரம் வெளஞ்ச மண்ணு, போன்ற படங்களை தயாரித்தவர். நூற்றுக்கும் அதிகமான படங்களுக்கு பண உதவி செய்தவர். தயாரிப்பாளர்களின் நலனில் மிகவும் அக்கறை கொண்டவர் என கலந்துகொண்ட அனைவரும் உருக்கமாக பேசினார்கள்.
அவருடைய நினைவஞ்சலி கூட்டத்திற்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் ஏற்பாடு செய்திருந்தது. பிலிம்சேம்பர் வளாகத்தில் நடைபெற்ற அஞ்சலி நிகழ்வில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.இராமசாமி, செயலாளர் ஆர்.ராதாகிருஷ்ணன், பொருளாளர் எஸ்.சந்திரபிரகாஷ் ஜெயின், செயற்குழு உறுப்பினர்கள்
அன்பாலயா கே.பிரபாகரன் மனோஜ்குமார், ஆர்.மாதேஷ், சௌந்தரபாண்டியன், என்.விஜயமுரளி, ராஜேஷ்வரி வேந்தன், ராமச்சந்திரன், நீல்கிரீஷ் முருகன் ஆகியோருடன் தயாரிப்பாளர்கள்  டி.ஜி.தியாகராஜன், ஆர்.பி.சௌத்ரி, ஏ.எல்.அழகப்பன், சிவசக்தி பாண்டியன், கே.எஸ்.சீனிவாசன், கே.எஸ்.சிவராமன், டி.சிவா, எம்.கபார், ஞானவேல், தனஞ்ஜெயன், எஸ்.வி.தங்கராஜ், கெட்டப்ராஜேந்திரன், கருணாகரன், கதிரவன், பி.ஜி.பாலாஜி, ஜி.வேணுகோபால், இயக்குனர்கள் பி.வாசு, அகத்தியன், திருமலை, நடிகர்கள் சித்ராலட்சுமணன், பஞ்சு சுப்பு, பிரமிட் நடராஜன், ரமேஷ் கண்ணா, நடிகை தேவயாணி, காட்ரகட்ட பிரசாத், ஆனந்தா சுரேஷ், கிருஷ்ணாரெட்டி, அருள்பதி, ரோகிணி பன்னீர்செல்வம், மற்றும் பெப்சி கிரி, பி.ஆர்.ஓ.யூனியன் சார்பில் டைமண்ட் பாபு, கிளாமர் சத்யா, வெங்கட் மற்றும் பலர் கலந்துகொண்டு மலரஞ்சலி செலுத்தி பேசினார்கள்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!