தமிழகம்

தலதீபாவளி கொண்டாடிய பெண் மீது கணவன் கண்முன்னே மண்ணெண்ணெய் ஊற்றி எரிக்க முயன்ற பெண்ணின் சித்தப்பா; போலீசார் விசாரணை

228views
மதுரை பழங்காநத்தம் மருதுபாண்டியர் நகர் பகுதியை சேர்ந்த பாலாஜி – பவித்ரா இருவரும் கடந்த 15 நாட்களுக்கு முன் பசும்பொன் நகரில் உள்ள ஒரு கோவிலில் காதல் திருமணம் செய்து கொண்ட நிலையில் கணவன் வீட்டில் புதுமண தம்பதிகளாக தலதீபாவளியை பட்டாசு வெடித்து கொண்டிருந்த போது திடிரென இவர் வீட்டில் அருகே வசித்து வரும் பவித்ராவின் சித்தப்பாவான கார்த்திக் (வயது 42) இவர்களின் காதல் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பவித்ரா மீது மன்னனையை ஊற்றி எறிக்க முயன்றுள்ளார்.
இதனையடுத்து அங்கிருந்து பாலாஜி மற்றும் அக்கம்பக்கத்தினர் கார்த்திக்கை தடுத்துள்ளனர். இச்சம்பவத்தில் பவித்ராவிற்கு லேசான தீ காயங்கள் ஏற்படவே சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
நேரு நகர் மற்றும் மருதுபாண்டியன் நகர் பகுதியில் அப்பொழுது ரோந்து பணியில் இருந்த எஸ் எஸ் காலனி இன்ஸ்பெக்டர் பூமிநாதன் கும்பலாக சண்டை நடப்பதை கண்டவுடன் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து குறித்து விசாரணை மேற்கொண்டனர்.

மேலும் சம்பவம் குறித்து எஸ்எஸ் காலனி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!