தமிழகம்

மதுரை புறநகர் பகுதிகளில் மு க ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஆகியோருடன் இனைத்து.முக அழகிரி பிறந்தநாள் போஸ்டரால் பரபரப்பு. கலக்கத்தில். திமுக நிர்வாகிகள்

76views
மதுரை மாவட்டம் சோழவந்தான் வாடிப்பட்டி மற்றும் விக்கிரமங்கலம் பகுதிகளில் மீண்டும் அழகிரியின் பிறந்தநாள் போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் திமுக நிர்வாகிகள் மத்தியில் கிலியை ஏற்படுத்தியுள்ளதாகவும் கட்சியினர் மத்தியில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.
முன்னாள் மத்திய அமைச்சர் முக அழகிரி பிறந்த நாளை ஒட்டி மதுரை மாவட்டம் சோழவந்தான் வாடிப்பட்டி விக்கிரமங்கலம் பகுதிகளில் அவரின் ஆதரவாளர்கள் சுவரொட்டிகளை ஒட்டி மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர் சமீப காலமாக முக அழகிரி பிறந்த நாளை கொண்டாடுவதில் அவரது ஆதரவாளர்கள் இடையே சுணக்கம் ஏற்பட்டு வந்த நிலையில் சமீபத்தில் இளைஞர் நலன் விளையாட்டு துறை அமைச்சராக பொறுப்பேற்ற தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் மகனான உதயநிதி மதுரை வந்தபோது முன்னாள் மத்திய அமைச்சரும் தனது பெரியப்பாவுமான முக அழகிரியை அவரதுஇல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார் அப்போது தனது தம்பி மகன் அமைச்சரானது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது என உச்சி மோர்ந்து அவரை வாழ்த்தி அனுப்பி வைத்தார்.
அதனை ஒட்டி அவரின் ஆதரவாளர்கள் மீண்டும் மு க அழகிரி கட்சியில் இணையும் நாள் வெகு தூரத்தில் இல்லை என்று பரவலாக பேசிக் கொண்டனர்.  இந்த நிலையில் இன்று முக அழகிரி பிறந்தநாளை முன்னிட்டு மதுரை மாவட்டம் சோழவந்தான் வாடிப்பட்டி ஆகிய பகுதிகளிலும் குறிப்பாக அவரின் தோப்பு உள்ள விக்கிரமங்கலம் பகுதிகளிலும் அவரை வாழ்த்தி போஸ்டர்கள் ஒட்டி உள்ளனர்.
இதில் எங்களின் எதிர்காலமே, என்றும் தம்பி உடையான் படைக்கு அஞ்சான் என்றும், ராஜராஜ சோழனின் மூத்த மருமகனே, உரிமைகள் ஊமையாவதும் இல்லை சரித்திரம் சாயம் போவதுமில்லை, நாங்கள் நம்புறது அவராலே வரும்,  போன்ற பஞ்ச் வசனங்களுடன் போஸ்டர்கள் ஒட்டி தங்களின் அரசியல் ஆசையை வெளிப்படுத்தி உள்ளனர்.  அதுவும் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஆகியோருடன் இணைத்து அழகிரி இருப்பது போல் போஸ்டர் ஒட்டி உள்ளதால் திமுக நிர்வாகிகள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆகையால் மீண்டும் அழகிரி கட்சிக்குள் இணைவார் என்ற நம்பிக்கையுடன் இருக்கும் அவரின் ஆதரவாளர்களும் கட்சிக்குள் அழகிரியை சேர்க்கும் பட்சத்தில் தங்களின் நிலை என்னவாகும் என்று திமுகவில் உள்ள நிர்வாகிகள் மத்தியில் கிலியையும் ஏற்படுத்தி உள்ளது குறிப்பாக இன்று முக அழகிரி பிறந்த நாளை முன்னிட்டு அரசியல் சம்பந்தமாக ஏதாவது கருத்துக்களை வெளியிடுவார் என்று அவரின் ஆதரவாளர்கள் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!