தமிழகம்

சோழவந்தான்அருகே பண்ணை வீட்டில் முன்னால் மத்திய அமைச்சர் முக அழகிரி தனது பிறந்த நாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கி எளிய முறையில் கொண்டாடினார்

100views
முன்னாள் மத்திய அமைச்சரும் திமுகவின் முன்னாள் தென்மண்டல அமைப்புச் செயலாளருமான மு க அழகிரி தனது பிறந்த நாளை முன்னிட்டு சோழவந்தான் அருகே தென்கரை பண்ணை வீட்டில் ஆதரவாளர்கள் உடன் நலத்திட்ட உதவிகள் வழங்கி.எளிய முறையில் கொண்டாடினார் சில தினங்களுக்கு முன்பு உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பொறுப்பேற்று மதுரை வந்தபோது தன்னை சந்தித்து ஆசி பெற்றதன் காரணமாக சில ஆண்டுகளாக பிறந்தநாள் கொண்டாடாமல் இருந்த முக அழகிரி நேற்று சோழவந்தான் அருகே தென்கரை பண்ணை வீட்டில் தனது ஆதரவாளர்கள் மற்றும் பண்ணை வீட்டில் பணிபுரியும் பணியாளர்களுடன் பிறந்த நாளை எளிய முறையில்.கொண்டாடி அவர்களுக்கு உதவிகள் வழங்கினார் இதில் கவுன்சிலர்கள் முபாரக் மந்திரி குட்டி மாவட்ட நிர்வாகிகள் விஜயகுமார் கோபிநாதன் மற்றும்.ராஜ்குமார் விக்கிரமங்கலம் உல்லாசம்.பால்பாண்டி மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!