தமிழகம்

ஓசூரில் காவேரி மருத்துவமனை மற்றும் மஜக ( MJK )நிர்வாகிகள் இணைந்து நடத்திய மருத்துவ சேவை ஆலோசனை கூட்டம்

95views
கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சியின் மருத்துவரணி மாவட்ட செயலாளரும் நியூ சிட்டி பார்மசி் (New City pharmacy ) ன் உரிமையாளருமான மஹபூப் பாஷா தலைமையில் மஜக நிர்வாகிகள் காவேரி மருத்துவமனை நிர்வாக இயக்குநர் Dr. P.D. அரவிந்தன் மற்றும் பல்வேறு துறை சார்ந்த மருத்துவர்களை சந்தித்து மருத்துவ சேவைக்கான ஆலோசனை நடத்தினர்.
இதில் சிறப்பாளராக கலந்து கொண்ட மஜக வின் தலைமை செயற்குழு உறுப்பினர் ஓசூர் நவ்ஷாத் அவர்கள் மகத்தான மருத்துவ சேவையின் அவசியத்தை வலியுறுத்தி பேசியதோடு மருத்துவமனை நிர்வாகத்தின் சில குறைபாடுகளையும் சுட்டிகாட்டினார்.  இதற்கு பதிலளித்த காவேரி மருத்துவமனை நிர்வாக இயக்குனர் Dr. அரவிந்தன் மனிதநேய ஜனநாயக கட்சியின் (MJK) சேவை அரசியலை நெகிழ்ந்து பாராட்டினார், மேலும் சுட்டிகாட்டப்பட்ட குறைகளை நிவர்த்தி செய்வதோடு தேவை உள்ள நோயாளிகளை பரிசீலித்து மஜக பரிந்துரைக்கும் பட்சத்தில் அவர்களுக்கு கூடுதல் சலுகையும் சிறப்பான மருத்துவ சேவையும் அளிப்பதாக உறுதியளித்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் பல்வேறு மருத்துவ முகாம்கள் இணைந்து நடத்துவது உட்பட பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டன.  இந்நிகழ்வில் பல்வேறு மருத்துவ துறை சார்ந்த கார்த்திக், சுப்ரமணியன், பிந்து கிரீஷ், மஜக வின் மாநகர செயலாளர் முஹம்மத் உமர், பொருளாளர் சாகிப், அன்சர், அக்ரம் உட்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் : A. முஹம்மத் யூனுஸ், கிருஷ்ணகிரி மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!