தமிழகம்

ராஜபாளையம் அருகே, பிளஸ்-1 மாணவி திடீர் மாயம்

83views
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகேயுள்ள மீனாட்சிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் குட்டிராஜா (42). இவரது மகள் வளர்மதி (16). இவர் ராஜபாளையத்தில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-1 வகுப்பு படித்து வருகிறார். நேற்று வழக்கம் போல பள்ளிக்குச் சென்ற மாணவி பின்னர் வீடு திரும்பவில்லை. குட்டிராஜா தனது மகளை உறவினர்கள் வீடு உட்பட பல இடங்களில் தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இது குறித்து அவர் தளவாய்புரம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். போலீசார் வழக்குபதிவு செய்து, காணாமல் போன பள்ளி மாணவியை தீவிரமாக தேடி வருகின்றனர்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!