தமிழகம்

உசிலம்பட்டி பகுதியில் சிறுதாணிய கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் விவசாயிகளுக்கான மாதாந்திர குறைந்திர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்

154views
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வட்டாச்சியர் அலுவலகத்தில் விவசாயிகளுக்கான மாதாந்திர குறை தீர்க்கும் கூட்டம் வட்டாச்சியர் கருப்பையா தலைமையில் நடைபெற்றது.,
இந்த கூட்டத்தில் பொதுப்பணித்துறை, வனத்துறை, வேளாண்த்துறை உள்ளிட்டு பல்வேறு துறைகளைச் சேர்ந்த அலுவலர்களும், உசிலம்பட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகளும் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் பேசிய விவசாயிகள் உசிலம்பட்டி பகுதியில் சிறுதாணிய உற்பத்தி அதிகமாக உள்ளதாகவும், கோடை காலம் முதல் பருவ காலம் வரை அதிகப்படியாக மானாவாரி விவசாயமாக சிறுதானியங்களை விவசாயிகள் சாகுபடி செய்து வரும் சூழலில் விவசாயிகளுக்கு பயனளிக்கும் விதமாக உசிலம்பட்டியில் சிறுதானிய கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் எனவும், 58 கால்வாயில் அனைத்து கண்மாய்களுக்கும் வைகை நீரை கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர்.,
தொடர்ந்து தற்போதைய பருவமழை காலத்தில் அதிகப்படியாக விவசாய பணிகளை மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வண்ணம் மலை அடிவார பகுதியில் உள்ள விவசாய நிலங்களை சேதப்படுத்தும் காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்தவும், பாதிக்கப்படும் பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்
செய்தியாளர் : உசிலை சிந்தனியா

Right Click & View Source is disabled.

error: Content is protected !!