கட்டுரை

மெட்ரோ ரயிலும் …. சென்னை மழையும்….

201views
சென்னையில் மெட்ரோ ரயில் பணிகள் பல நாட்களாக வெவ்வேறு இடங்களில் நடந்து கொண்டிருப்பது அனைவரும் அறிந்த செய்தி.இதன் தொடர்ச்சியாக தமிழ்நாடு அரசு சார்பில் மழை நீர் வடிகால் அமைக்கும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதன் விளைவாக பல இடங்களில் போக்குவரத்து மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இதில் குறிப்பாக மைலாப்பூர் மற்றும் வடபழனி ஒட்டி உள்ள பகுதி மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
மேலும் மழை அடிக்கடி பெய்து வருவதால் சாலைகள் முழுவதும் சகதிக்காடாக காட்சி அளிக்கிறது. சராசரியாக இருபது நிமிடத்தில் செல்ல வேண்டிய இடத்திற்கு குறைந்த பட்சம் ஒரு மணி நேரம் ஆகிறது என வருத்தத்துடன் பலர் புலம்பி தவிக்கின்றனர்.

ஏற்கனவே அரசியல் தலைவர்கள் வருகை ,போராட்டம் என்று பல காரணங்களால் போக்குவரத்து மாற்றங்களால் நிலை தடுமாறும் மக்கள் இத்தகைய பெரிய பணிகள் திட்டமிடல் இன்றி முக்கிய வேலைகள் பொறுமையாக நடப்பது மிகுந்த வருத்தம் அளிக்கிறது .

மேலும் மழைக்காலம் நெருங்குவதால் திட்டமிட்டபடி வேலைகள் முடியாவிடில் மேலும் இன்னல்களுக்கு சென்னை மக்கள் ஆளாவார்கள்.
சிங்காரச் சென்னை மழைக்காலம் முன்பு சிங்காரம் ஆகுமா…,?
காத்திருப்போம்….
கௌரி சங்கர் பாண்டியன்

Leave a Response

<p>Right Click & View Source is disabled.</p>
error: Content is protected !!