தமிழகம்

தென்காசியில் மருத்துவக்கல்லூரி விரைவாக அமைத்திட வேண்டும்; தமுமுக கூட்டத்தில் தீர்மானம்..

97views
தென்காசி மாவட்டம் அச்சன்புதூர் தமுமுக சார்பில் டிசம்பர் 6 ஆர்ப்பாட்டம் ஏன்? என்று விளக்கும் தெருமுனை கூட்டம் நடைபெற்றது. இதில், தென்காசியில் விரைவாக மருத்துவக்கல்லூரி அமைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இந்த கூட்டத்திற்கு கிளை கிளைத் தலைவர் ஜெய்னுலாப்தீன் தலைமை தாங்கினார். கிளை செயலாளர் அகமது அலி ரஜாய் வரவேற்புரை ஆற்றினார்.

மமக செயலாளர் மைதீன் பொருளாளர் ஜாகிர், துணை தலைவர் அமீன், துணை செயலாளர்கள் ஆதம்காசியார், அமானுல்லா, கமாலுதீன், அப்துல் ரஹிம், ஜக்கரியா ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமுமுக துணை பொது செயலாளர் மைதீன் சேட்கான், தமுமுக மாவட்ட தலைவர் முகம்மது யாக்கூப், மாவட்ட துணை தலைவர் முகம்மது பிலால், முன்னாள் மாவட்ட துணை செயலாளர் பீர் மைதீன், மனித உரிமை அணி மாவட்ட செயலாளர் சேக், இஸ்லாமிய பிரச்சார பேரவை மாவட்ட செயலாளர் அப்துல் முத்தலிப், ஒன்றிய செயலாளர் முகமதுகனி, ஒன்றிய பொருளாளர் வாசிம் அக்ரம் ஆகியோர் சிறப்புரையாற்றினர். இதில் முன்னாள் துணை செயலாளர் பாதுஷா, தொண்டரணி உமர், தொழிற்சங்க அணி மசூது, மனித உரிமை அணி ஜாபர், ராஜா முகம்மது ஆகியோர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் அச்சன்புதூர் வழித்தடத்தில் இயக்கப்பட்ட சுரண்டை மற்றும் தென்காசி பேருந்துகள் தற்போது இயங்காமல் உள்ளது அதனை இயக்க வேண்டும் எனவும், அச்சன்புதூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை மேம்படுத்திடவும், 10 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் உள்ள சிறைவாசிகளை விடுதலை செய்திட வேண்டும் எனவும், தென்காசியில் விரைவாக மருத்துவக்கல்லூரி அமைத்திட வேண்டும் எனவும், பள்ளி கல்லூரி மாணவர்கள் போதைப்பொருள்களால் சீரழிவதை தடுக்க காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், 1 முதல் 8 வரை நிறுத்தப்பட்ட சிறுபான்மை கல்வி உதவித்தொகையை மீண்டும் வழங்கிட வேண்டும் எனவும், சொத்து வரி உயர்வை அரசு பரிசீலித்து குறைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
செய்தியாளர் : அபுபக்கர்சித்திக், தென்காசி

Right Click & View Source is disabled.

error: Content is protected !!