தமிழகம்

திருமங்கலம் அருகே கிராமப்புற மக்களுக்காக , இலவச பொது அறுவை சிகிச்சை ஆலோசனை முகாம் துவக்கம் – 10 ரூபாய் – க்கு மருத்துவ சிகிச்சை அளிக்கும் மருத்துவமனையில் நடைபெற்ற முகாமில் ஏராளமானோர் பங்கேற்பு.

110views
மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த டி. புதுப்பட்டி அருகே கிளானிஸ் மருத்துவமனை என்ற பெயரில் கிராம மக்களுக்காக பத்து ரூபாய் செலவில் மருத்துவ சிகிச்சை அளிக்கும் மருத்துவமனையில், குக்கிராமங்களில் உள்ள மற்றும் கிராம பகுதியில் உள்ள மக்களுக்காக இன்று ஒரு நாள் இலவச பொது அறுவை சிகிச்சை ஆலோசனை முகாம் துவக்கப்பட்டது .  இம்முகாமை மதுரை திமுக தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் துவக்கி வைத்தார்.மேலும் திருமங்கலம் தெற்கு ஒன்றிய செயலாளர் ஆலம்பட்டி சண்முகம் உட்பட திமுக நிர்வாகிகள் பலர் பங்கு கொண்டனர். இம்மருத்துவமனையின் நிறுவனரும், தலைமை மருத்துவருமான புருஷோத்தமன் , கிராமபுற மக்களுக்காக இங்கு மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களுடைய நலம் கருதி குறைந்த செலவில் நிறைந்த சிகிச்சை அளித்து, அவர்களுடைய நலனில் அக்கறை காட்ட, தான் முயற்சி செய்து வருவதாகவும் தெரிவித்தார்.  மேலும் இம்மருத்துவமனையில் ரூபாய் 30 – க்கு உடல் முழுவதும் முழு பரிசோதனை செய்வதற்காக அதிநவீன தொழில்நுட்ப மருத்துவ உபகரணங்களை கொண்டு , மூன்று நிமிடத்தில் பரிசோதனை செய்ய விரைவில் முகம் அமைக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!