உலகம்

சார்ஜா MDS ஈவென்ட்ஸ் மற்றும் மேனேஜ்மென்ட் கன்சல்டன்சி நிறுவனத்தின் FinEase Software அறிமுக விழா

52views
சார்ஜா MDS ஈவென்ட்ஸ் மற்றும் மேனேஜ்மென்ட் கன்சல்டன்சி நிறுவனத்தின் FinEase Software அறிமுக நிகழ்வு, 20.95.2024 அன்று மாலை 7 மணி அளவில் துபாய் லாவண்டர் ஹோட்டல் பிசினஸ் அரங்கத்தில் சிறப்பாக நடைபெற்றது.

இந்த நிகழ்வில் பிரைனோ பிரைன் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் ஆனந்த் சுப்பிரமணியம் தலைமை தாங்கினார். TEPA தலைவர் Dr. பால் பிரபாகர், அன்வர் பிஸினஸ் குரூப் மேலாண்மை இயக்குனர் அன்வர்தீன், துபாய் முத்தமிழ்ச் சங்கத்தின் தலைவர் ஷா ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினர் சிங்கப்பூர் Chartered Accountant Dr. முகைதீன் அப்துல் காதர் அவர்கள் FinEase சாப்ட்வேர் அறிமுகம் செய்து Deskstop மற்றும் Cloud application மூலம் வடிவமைக்கப்பட்டு எளிமையான முறையில் உபயோகிக்க முடியம் என்பதையும் அதன் பயன்பாட்டினையும் முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்தார். முன்னதாக தணிக்கையாளர்கள் கருணாகரன் மற்றும் அனஸ் ஆகியோர் அதன் சிறப்புகளைப் பற்றி எடுத்துரைத்தனர். MDS ரஹ்மத்துல்லாஹ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

முனைவர் முகைதீன் அவர்கள் கூறுகையில் +2 படித்த மாணவர்கள் கூட ஒரு வார பயிற்சிக்குப் பின் உடனடியாக இதில் பயிற்சி எடுத்து வேலை செய்து தேவையான அறிக்கைகளை பெற்றுக் கொள்ளலாம் என்றும், மிகவும் குறைந்த விலையில் Accounting, Personnel & Payroll and Inventoy System ஆகியவற்றை பெற்றுக் கொள்ளலாம். மேலும் அதிக தகவல் விரும்புவோர் கீழ்க்கண்ட மின்னஞ்சல் மற்றும் வாட்ஸ்அப் நம்பரில் தொடர்பு கொள்ளலாம். Info@mdsconsultants.me & 0565350744, 0586788604.

இந்த நிகழ்வில் முஹிப்பில் உலாமா மாரூப் காக்கா, பைசூர் ரஹ்மான், Hydrolite சித்திக், கோல்டன் குளோப் சுமேஷ் Attitude சானியா, திரு முனாப், MM முஸ்தபா, ஜாஹீர் உட்பட பல தொழிலதிபர்கள் மற்றும் கணக்காளர்கள் கலந்து கொண்ட னர். முடிவில் சாப்ட்வேர் லியாகத்அலி நன்றி கூறினார்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!