Uncategorizedதமிழகம்

கீழக்கரை முஹம்மது சதக் பொறியியல் கல்லூரி மற்றும் இந்திய புவி அமைப்பியல் துறையும் இனைந்து நடத்திய புவி சார் பாரம்பரியத்தை பாதுகாப்போம் என்ற ஒருநாள் கருத்தரங்கம் நடைபெற்றது,

135views
முஹம்மது சதக் பொறியியல் கல்லூரி மற்றும் இந்திய புவி அமைப்பியல் துறையும் இனைந்து நடத்திய “புவி சார் பாரம்பரியத்தை பாதுகாப்போம்” என்ற ஒருநாள் கருத்தரங்கம் கல்லூரி முதல்வர் (பொறுப்பு) முனைவர் இரா.செந்தில்குமார் தலைமையில் நடைபெற்றது.
கல்லூரி கட்டிடக்கலைத் துறைத் தலைவி முத்துமாரி அவர்கள் அனைவரையும் வரவேற்றார்.
இந்திய புவி அமைப்பியல் துறையைச் சார்ந்த திரு.ஹர்ஷா சுந்தர், விசாகப்பட்டினம் திரு நாயுடு படிரெட்டி, திரு,வாசு சென்னை,, செல்வசுதன்ராம் சென்னை, முத்தமிழ்செல்வன் சென்னை ஆகியோர் கலந்துக்க கொண்டு இந்திய புவிசார் பாரம்பரையத்தை பாதுகாக்க நம் இந்திய புவி அமைப்பியல் துறை எடுத்து வரும் நடவடிக்கைகள் பற்றியும் நமது இந்திய இயற்கை பாரம்பரியத்தை பாதுக்காக்க எடுத்து வரும் நடவடிக்கைகள் பற்றி விரிவாக எடுத்துரைத்தனர்.
உலகளவில் உள்ள அதிசயங்களில் இந்தியாவில் தான் இரண்டு அதிசயங்களான தாஜ்மஹால் மற்றும் குதுப்பினார் போன்ற புவி பண்பாட்டு மரபு வளங்கள் உலகளவில் நாற்பது இடங்களில் பெருமைப்படும் விதமாக அமைந்துள்ளது.

இராமேஸ்வரத்திற்கு அருகில் அமைந்துள்ள மன்னார் வளைகுடா உயிருக்கோள காப்பகம் மற்றும் கடல் தேசிய பூங்கா தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்க்கும் விதமாக அமைந்துளளது.  இதில் அரியவகை கடல் உயிரினங்கள் உள்ளன. அதை நாம் பாதுக்காப்பாக பேணிக்காப்பப்த்து நமது கடமையாகும் என தெரிவித்தனர்,
கட்டிட பொறியியல் துறைப் பேராசிரியர் இப்திகாஷெரீன் நன்றியுரை வழங்கினார்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!