தமிழகம்

சென்னை ஆயிரம் விளக்கில் பச்சை அவுலியா அரங்கில் மனித நேயப் பேரொளி நபி(ஸல்) பிறந்த நாள் மத நல்லிணக்க இலக்கிய விழா

60views
டிசம்பர் 7 சென்னை ஆயிரம் விளக்கில் பச்சை அவுலியா அரங்கில் மனித நேயப் பேரொளி நபி(ஸல்) பிறந்த நாள் மத நல்லிணக்க இலக்கிய விழா இ.யூ.மு.லீக் தலைமை நிலைய பாடகர் அருளிசை அருவி அல்ஹாஜ் கவிஞர் ஏ.ஷேக்மதார் ஆமிரி தலைமையில் நடைபெற்றது.
கீழக்கரை அல்ஹாஜ் டி.எம்.எஸ்.கமால் அப்துல் காதர்,சிந்தனை சுரங்கம் பட்ரோடு ஷவுக்கத்அலி,ஹாஜி தாஜ் முஹம்மது சவுத்ரி, நக்ஷபந்த் நிஜாம் ஹமீது, கீழக்கரை நியாஸ், செய்யதுபாக்கர், மகளிர் அணி சென்னை மண்டல இ.யூ.மு.லீக் அமைப்பாளர் ஹாஜியாணி ஏ.எம் ஜெய்தூன்,மில்லத் ஹஜ் சர்வீஸ் அல்ஹாஜ் முஜஃப்பர் அஹமது ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆயிரம் விளக்கு மஸ்ஜிதே மஹ்மூதி இமாம் மவுலானா இன்துஜார் ஆலம் கிராஅத் ஓதி துவக்கி வைத்தார்.  கவிஞர் ஏ.ஷேக்மதார் ஆமிரி அனைவரையும் வரவேற்று நபி புகழ் பா இசைத்தார்.
சுன்னத் ஜமாத் பேரியக்கம் தலைவர் மவுலானா டாக்டர் எம்.ஷைகு அப்துல்லாஹ் ஜமாலி, இ.யூ.மு.லீக் தேசிய மகளிர் அணி தலைவி ஹாஜியாணி ஏ.எஸ்.ஃபாத்திமா முஜஃப்பர் எம்.சி,
தி.மு.கழக ஆயிரம் விளக்கு பகுதிச் செயலாளர் மா.பா.அன்பு துரை எக்ஸ்.எம்.சி., 111 ஆவது மாமன்ற தி.மு.கழக உறுப்பினர் வழக்கறிஞர் எம்.ஏ.நந்தினி எம்.சி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில செயலாளர் அல்ஹாஜ் கல்லிடை அசன் சேக்,விடுதலை சிறுத்தைகள் கட்சி இஸ்லாமிய சனநாயக பேரவை மாநிலத் துணை செயலாளர் வழக்கறிஞர் கவிஞர் அஜ்மல் கான்,அறம் கல்வி அறக்கட்டளை எம்.பி.முஹம்மது நாஸர், நல்லாசிரியர் போரூர் எம்.எஸ்.எம்.ஷேக் ரஷீத், சுன்னத் ஜமாத் பேரியக்கம் பொதுச் செயலாளர் சைதை ஷாஹுல் ஹமீது, 111 வட்ட தி.மு.கழக செயலாளர்கள் ஆயிரம் விளக்கு ஆர்.பாபு, எஃப்.பீட்டர் ஜான் ஆகியோர் சிறப்புச் சொற்பொழிவு நிகழ்த்தினார்கள்.
சிறப்பு விருந்தினர் அனைவருக்கும் டாக்டர் எம்.ஷைகு அப்துல்லாஹ் ஜமாலி ஹஜ்ரத் சால்வை அணிவித்து சிறப்பு செய்தார்.  ஃபாத்திமா முஜப்பர் அவர்களுக்கு கீழக்கரை நூர்ஜஹான் டீச்சரும், ஆயிரம் விளக்கு 111 ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் எம்.ஏ.நந்தினி அவர்களுக்கு ஹாஜியாணி ஃபாத்திமா முஜபஃபர் அவர்களும் சால்வை அணிவித்து சிறப்பு செய்தார்கள்.
இ.யூ மு.லீக் மாநிலப் பொதுச்செயலாளர்  அல்ஹாஜ் அமீருல் மில்லத் கே.ஏ.எம்.முஹம்மது அபூபக்கர் எக்ஸ். எம்.எல்.ஏ.அவர்கள் அபுத்தலாயில் டாக்டர் எம.ஷைகு அப்துல்லாஹ் ஜமாலி ஹஜ்ரத் கிபுலா அவர்களுக்கு சால்வை அணிவித்து நிறைவுரையாற்றி நன்றி நவின்றார்கள்.
இ.யூ.மு.லீக் மாநிலத் துணைச் செயலாளர் காயல் எஸ்.ஏ.இபுராஹிம் மக்கி துஆ ஓதினார்.
இந்நிகழ்ச்சியில் இ.யூ.மு.லீக் மாநிலத் துணைச்செயலாளர் ஆர்.ஜபருல்லா எக்ஸ்.எம்.சி, ஆயிரம் விளக்கு புர்தா மஜ்லிஸ் நிஜார் மொய்து,துபை தைக்கா அப்துல் கபூர்,உஸ்வதுல் ஹஸனா சதகத்துல்லாஹ்ஹஜ்ரத், ஏ.எஸ்.எம்.முஹம்மது அப்துல் நஸீர் ஆமிரி,முஹியத்தீன்ஷா ஃபஹீமீ ஆர்.முஹம்மது ஆரிஃப்,மாணவரணி எஸ்.அல்அமீன் பி.ஈ.,முதஹர் பி.ஈ., சல்மான், அப்பாஸ் அலி, முஹம்மது இப்ராஹிம்,ஏகத்துவ மெஞ்ஞான சபை அப்துல் பாஸித்,லைனர் அல்தாஃப், கீழக்கரை ஹமீதிய்யா மெட்ரிகுலேஷன் முன்னாள் ஆசிரியை ஜனாபா நூர்ஜஹான்பீவி அப்துல் நஸீர், எஸ்.பீர்பானு ஷேக்மதார்,பெரம்பூர் மகளிர் அணி அமைப்பாளர் சாஹிப் நாச்சி, மணிச்சுடர் பூவை காதர் உள்ளிட்ட சிறப்பு அழைப்பாளர்கள் கலந்து கொன்டு சிறப்பித்தனர்.
நிகழ்ச்சித் துவக்கமாக அண்ணா சாலை– கிரீம்ஸ் சாலை சந்திப்பில் இ.யூ.மு.லீக் தாய்ச்சபைத் திருக்கொடியை இ.யூ.மு.லீக் மகளிர் அணி தேசியத் தலைவி ஹாஜியாணி ஜனாபா ஏ.எஸ்.ஃபாத்திமா முஜஃப்பர் ஏற்றி வைத்தார்.
அனைவருக்கும் இரவு உணவு பிரியாணி வழங்கப்பட்டது.  இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆயிரம் விளக்கு மீலாதுந் நபி (ஸல்) விழா நற்பணிக் குழுவினர் சிறப்பாக செய்தனர்.
செய்தியாளர். A. சாதிக்பாட்சா, தேனி மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!