தமிழகம்

திருமங்கலம் அருகே மருது சகோதரர்களுக்கு மணி மண்டபம் அமைக்க திமுக சார்பில் ரூபாய் 5 லட்சம் நிதி – (மருது சகோதரர்களுக்கு வெண்கல சிலை அமைக்க கிராம மக்கள் கோரிக்கை )

117views
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே ஆலங்குளம் கிராமத்தில், மருது சகோதரர்களின் சிலைகளுக்கு அவர்களது பிறந்தநாளை முன்னிட்டு மதுரை திமுக தெற்கு மாவட்டச் செயலாளர் மணிமாறன்,மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
இதனை தொடர்ந்து மருது சகோதரர் சிலைகளை பாதுகாக்கும் விதமாக மணி மண்டபம் அமைப்பதற்கு, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆணைக்கிணங்க, ரூபாய் 5 லட்சம் நிதியை மாவட்ட செயலாளர் மணிமாறன் கிராம மக்களிடம் வழங்கினார்.
இந்நிலையில் கிராம மக்கள் மருது சகோதரர்களுக்கு வெண்கலச்சிலை அமைக்க அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து அரசுக்கு பரிந்துரை செய்து உத்தரவு பெற்றபின் அதற்கான பணியினையும் நிறைவேற்றுவதாக திமுக சார்பில் தெரிவிக்கப்பட்டது.
செய்தியாளர் : வி காளமேகம் மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!