தமிழகம்

திருமங்கலம் அருகே தலித் இன மக்கள் நடத்திய நான்கு மணி நேரம் சாலை மறியல் போராட்டம் முடிவுக்கு வந்தது

223views
திருமங்கலம் அருகே தலித் இன மக்கள் நடத்திய நான்கு மணி நேரம் சாலை மறியல் போராட்டம் முடிவுக்கு வந்தது – திருமங்கலம் டிஎஸ்பி ஐந்து நிமிடங்களில் கலைந்து செல்லவில்லையென்றால் சட்டப்படிநடவடிக்கை எடுக்கப்படுவதாக எச்சரித்ததால் போராட்டக்காரர்கள் கலைந்தனர்.
மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த டி.கல்லுப்பட்டி அருகே உள்ள வெங்கடாசலபுரம் கிராமத்தில் நேற்று இரவு மது போதை அருந்தி கொண்டிருந்த கல்லூரி மாணவன் அருண்குமார் மற்றும் சக நண்பர்களை, எம். புளியங்குளம் கிராமத்தைச் சார்ந்த 6 பேர் கொண்ட கும்பல் கம்பால் சரமாரியாக தாக்கியதில் , கல்லூரி மாணவன் அருண் குமார் பலத்த காயத்துடன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
(முன்னதாக அருண்குமார் மற்றும் சக நண்பர்களுடன் எம் .புளியங்குளத்தில் மது வாங்க சென்ற போது, எம் புளியங்குளத்தைச் சார்ந்த தேவரின மக்களுக்கும் அருண்குமார் நண்பர்களுக்கு இடையே கைகலப்பு ஏற்பட்டதன் காரணமாக, எம். புளியங்குளத்தை சார்ந்த ஆறு பேர் கொண்ட கும்பல் அருண்குமார் உட்பட சக நண்பர்களை தாக்கியது குறிப்பிடத்தக்கது)
இதனை தொடர்ந்து எம். புளியங்குளம் கிராமத்தைச் சேர்ந்த வீரபாண்டி என்ற கண்ணன் , விஜய பிரபு , சோனை குமார், சோனை பாண்டி , கார்த்திக் முனிஸ்வரன் ஆகிய 6 பேரை மாவட்ட எஸ்பி சிவபிரசாத் உத்தரவின் பேரில் கைது செய்தனர்.
இதனை தொடர்ந்து தலித் இன மக்கள் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்ததால் ஆத்திரமடைந்த தலித் இன மக்கள் டி.கல்லுப்பட்டி காவல் நிலையத்தைமுற்றுகையிட்டு,தங்கள் இன மக்கள் மீது போடப்பட்ட வழக்கை விலக்கக் கூறியும், பலியான அருண்குமார் -ன் குடும்பத்திற்கு அரசு வேலை வழங்க கோரியும், முறையிட்டனர். இதனை தொடர்ந்து வெங்கடாஜலபுரம் கிராமத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சாலை மறியல் போராட்டம் நான்கும் நேரமாக நீடித்தது .இதனை தொடர்ந்து 100 – க்கும் மேற்பட்ட போலீசார் அங்கே குவிக்கப்பட்ட நிலையில், டிஎஸ்பி சரவணகுமார் போராட்டக்காரர்களிடம் 15 நிமிடங்களில் கலைந்து செல்லவில்லை என்றால், சட்டப்படி நடவடிக்கை எடுப்பதாகவும் , நீங்கள் கூறிய கோரிக்கைகள் அனைத்தும் ஏற்றுக்கொண்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார் .
இதனை தொடர்ந்து போராட்டக்காரர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர் .நான்கு மணிநேர முறையில் போராட்டம் முடிவுக்கு வந்தது.
செய்தியாளர் : வி காளமேகம் மதுரை மாவட்டம்

 

Right Click & View Source is disabled.

error: Content is protected !!