தமிழகம்

உசிலம்பட்டி அருகே தும்மக்குண்டில் மதுபானக்கடையை அகற்ற கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு

77views
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே தும்மக்குண்டு பஞ்சாயத்துக்கு உட்பட்டது டி.கரிசல்பட்டி கிராமம்.இக்கிராமத்தில் சுமார் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இக்கிராமத்தின் 400 மீட்டர் அருகில் மதுபான கடை திறக்கப்பட்டு உள்ளது.கரிசல்பட்டியிலிருந்து தும்மக்குண்டில் பள்ளியில் படிக்கும் மாணவ மாணவியர் இந்த மதுபானக்கடையைத் கடந்துதான் வரவேண்டும் .மேலும் பெண்கள் தனியாக செல்ல முடியாமல் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இதனால் சம்மந்தப்பட்ட மதுபானக்கடையை அகற்றக்கோரி பலமுறை மனு அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் ஆண்கள் பெண்கள் மற்றும் பள்ளி மாணவ மாணவியர்கள் வகுப்புகளை புறக்கணித்து சுமார் 500க்கும் மேற்ப்பட்டோர் மதுபான கடையை அகற்ற வேண்டும் என தும்மக்குண்டு அருகில் உசிலம்பட்டி திருமங்லம் சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்ப்பட்டுள்ளது.மேலும் மதுபானக்கடையை அகற்ற வேண்டும் என்ற பதாகைகளை ஏந்தி கோஷமிட்டபடி உசிலம்பட்டி சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.இதனால் உசிலம்பட்டி திருமங்கலம் சாலையில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.சம்பவமறிந்த சிந்துபட்டி போலிசார் சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு நடவடிக்கை எடுப்பதாக கூறியதையடுத்து கலைந்து போகச் செய்தனர்.
செய்தியாளர் : உசிலை சிந்தனியா

Right Click & View Source is disabled.

error: Content is protected !!