தமிழகம்

திடீர் சாலை மறியலில் ஈடுபடும் கால்நடைகள் கண்டுகொள்ளாத கால்நடை உரிமையாளர்கள் நடவடிக்கை எடுக்காத மாநகராட்சி அதிகாரிகள் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள் திடீர் திடீர் என கால்வாயில் விழுகும் கால்நடைகள் அலைக்கழிக்கப்படும் தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்பு வீரர்கள் நிரந்தர தீர்வு காணுமா மாநகராட்சி நிர்வாகம்

71views
மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 100 வார்டுகளிலும் மற்றும் புறநகர் பகுதிகளிலும் சாலைகளில் திடீர் திடீரென கால்நடைகள் மொத்தமாக குவிந்து மறியலில் ஈடுபடுகிறது இதை அவிழ்த்து விடும் கால்நடைகளில் உரிமையாளர்கள் இதைப் பற்றி கண்டு கொள்வதே இல்லை மாநகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை தகவல் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என வாகன ஓட்டிகள் குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர்,
இரவு நேரங்களில் அதிக அளவு கால்நடைகள் சாலையில் படுத்திருப்பதால் வாகன ஓட்டிகள் கீழே விழுந்து படுகாயங்களுடன் செல்கின்றனர் மேலும் கால்வாய் உள்ள பகுதிகளில் ஒரு சில கால்நடைகள் திடீரென கால் தவறி கீழே விழுகவும் செய்கிறது அப்பொழுது உடனடியாக கால்நடை உரிமையாளர்களோ அல்லது அப்பகுதி மக்களும் தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்பு குழுவிற்கு தகவல் தெரிவிக்கின்றனர் அவர்கள் விரைவாக வந்து கால்நடையை மீட்டு சென்று விடுகிறார்கள் மீட்கும் நேரத்தில் அந்த கால்நடை உரிமையாளர்கள் அங்கே இருப்பதில்லை இருந்தால் ஏதேனும் பிரச்சனை வந்து விடுமோ என அஞ்சி தப்பி விடுகிறார்கள்,

சாலையில் திரியும் கால்நடைகளை சம்பந்தப்பட்ட உரிமையாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கையாகவே உள்ளது இது போன்ற நிகழ்வு நேற்று இரவு மதுரை மாடக்குளம் மெயின் ரோட்டில் உள்ள கோரை வாய்க்கால் பகுதியில் ஒரு கண்ணுகுட்டி ஒன்று விழுந்தது இது குறித்து மதுரை டவுன் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கவே சம்பவ இடத்திற்கு விரைந்த மதுரை டவுன் தீயணைப்பு வீரர்கள் சுமார் அரை மணி நேரம் போராடி வாய்க்காலில் கிடந்த கன்று குட்டியை விட்டனர் தேவை இன்றி கால்நடைகளை சாலையில் சுற்றப்படும் உரிமையாளர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும் மாநகராட்சி நிர்வாகம் இருசக்கர வாகன ஓட்டுதல் படுக்காயத்திலிருந்து அல்லது உயிரிலிருந்து காக்குமா எதிர்பார்ப்புடன் அப்பாவி பொதுமக்கள்,
செய்தியாளர் : வி காளமேகம் மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!