தமிழகம்

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு மனு அளிக்க திரண்ட கிராம மக்கள்

53views
மதுரை அருகே மினரல் வாட்டர் நிறுவனத்தை கட்டுப்படுத்த கோரி கிராம மக்கள் மனு மதுரை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.  மதுரை அருகே பனையூர் கிராமத்தில், கன்மாய் அருகே தனியாருக்கு சொந்தமான மினரல் வாட்டர் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. தினசரி அதிகப்படியான நீரை உறிஞ்சுவதால், இப்பொழுது அதில் நீர்மட்டம் குறைந்து வருவதாகவும் ,  மேலும் ,சுத்திகரிப்பு தண்ணீரை அருகில் உள்ள பொதுப்பணித்துறை கால்வாயில் கலக்க விடுவதால், விவசாயங்கள் கடுமையாக பாதிக்கப்படுவதாக இப்பதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.  இது தொடர்பாக, மதுரை சுற்றுச்சூழல் மற்றும் மாசு கட்டுப்பாடு வாரிய அலுவலகத்தில் புகார் செய்தும், மினரல் வாட்டர் நிறுவனத்தின் செயல்பாடுகளை கட்டுப்படுத்த தவறியதாக கூறப்படுகிறது. இதனால், இப்பகுதி மக்கள் மதுரை மாவட்ட ஆட்சிய அலுவலகத்திற்கு வந்து தனியார் மினரல் வாட்டர் நிறுவனத்தை கட்டுப்படுத்த கோரியும் ஆலையை அதிகாரி பார்வையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க கோரியும், மனுக்களை அளித்தனர்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!