Uncategorized

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை கழக கல்லூரியில் மாணவிகளுக்கு இலவச விடுதி மற்றும் பட்டப்படிப்புடன் தனித்திறன் வளர்க்கும் பயிற்சி; கல்லூரி முதல்வர் தகவல்

226views
சங்கரன்கோவில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கல்லூரியில் மாணவிகளுக்கு இலவச விடுதி மற்றும் பட்டப்படிப்புடன் தனித்திறன் வளர்க்கும் பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக கல்லூரி முதல்வர் அப்துல் காதிர் தெரிவித்துள்ளார். தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் வட்டம் நடுவக்குறிச்சி பகுதியில் அமைந்துள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கல்லூரியில் 2023-24 கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை வருகிற 18ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது.
இது குறித்து கல்லூரியின் முதல்வர் முனைவர் அப்துல் காதிர் கூறியதாவது: எமது கல்லூரியில் பி.காம்., பி.பி.ஏ., பி.ஏ., (ஆங்கிலம்) பி.எஸ்சி., (கம்ப்யூட்டர் சயின்ஸ்) மற்றும் பி.எஸ்சி., (கணிதம்) ஆகிய பட்டப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு தகுதியான மாணவ-மாணவிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பங்களை பல்கலைக்கழக இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து அல்லது கல்லூரி அலுவலத்தில் பெற்று விண்ணப்பிக்கலாம். அரசு உத்தரவின் படி மாணவர் சேர்க்கை பிளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட தேதியிலிருந்து பத்து நாட்களுக்கு பிறகு நடைபெறும். கல்லூரி வளாகத்தில் அரசு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் இயங்கும் விடுதியில் மாணவிகள் இலவசமாக தங்கி பயிலலாம் என்றும், கடந்த கல்வி ஆண்டு முதல் மாணவிகளுக்கு தட்டச்சு பயிற்சி அளிக்கப்படுகிறது என்றும் தெரிவித்துள்ளார். மேலும் இந்த கல்வி ஆண்டு முதல் வணிகவியல் பயில்பவர்களுக்கு ஆடிட்டர் படிப்பு விழிப்புணர்வு பயிற்சியும், பிபிஏ பயில்பவர்களுக்கு கம்பெனி மேலாண்மை பயிற்சியும், கம்ப்யூட்டர் சயின்ஸ் பயில்பவர்களுக்கு ஆண்ட்ராய்டு செயலி உருவாக்கும் பயிற்சி அளிக்கும் வகையில் புதிய மேம்படுத்தப்பட்ட கணிணி ஆய்வுக்கூடம் சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா அவர்களால் திறந்து வைக்கப்பட்டுள்ளது எனவும், கல்லூரியில் பயிலும் அனைத்து மாணவ-மாணவிகளுக்கும் தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளுக்கு இலவச பயிற்சியும் நடத்தப்பட உள்ளதாகவும், தனித்திறன் வளர்க்கும் ஸ்கிரீன் பிரிண்டிங், தையல் உள்ளிட்ட ன பயிற்சிகள் அளிக்கப்படும் எனவும் தெரிவித்தார். மேலும் தமிழக அரசின் நான் முதல்வன் திட்டத்தின் மூலம் சரளமாக ஆங்கிலத்தில் பேசும் பயிற்சியும் அளிக்கப்படும் என்றார்.
செய்தியாளர் : அபுபக்கர்சித்திக், தென்காசி

Right Click & View Source is disabled.

error: Content is protected !!