முனைவர் என்.பத்ரி
மணிப்பூரில் கடந்த 30 ஆண்டுகாலமாக மதுவிலக்கு கொள்கை அமலில் உள்ளது.ஆனால் இந்தக் கொளகையை மணிப்பூர் அரசு தற்போது கைவிட்டு விட்டதாக அம்மாநில அரசு கூறியுள்ளது சமூக ஆர்வலர்களுக்கு பேரதிர்ச்சியை அளிக்கிறது.அதனால் தற்போது தமிழ்நாட்டில் டாஸ்மாக் இருப்பது போல மதுபான தயாரிப்பு, விற்பனையை ஒழுங்குபடுத்த அரசு நிறுவனம் அனைத்தும் அம்மாநிலத்திலும் அந்த மாநில அரசு உருவாக்கி உள்ளது.
இந்தியாவில் மதுவிலக்கு அமலில் இருந்த மாநிலங்களில் மணிப்பூரும் ஒன்று. 1970களில் இருந்தே மணிப்பூரில் மதுவிலக்குக்கான போராட்டங்கள் தொடங்கின. ஆனால் 1991-ம் ஆண்டு முதல்தான் மணிப்பூரில் மதுவிலக்கு அமலுக்கு வந்தது. அதே நேரத்தில் எஸ்சி, எஸ்டி பிரிவினர் பாரம்பரிய மது தயாரிப்புக்கு அனுமதிக்கப்பட்டு வந்தது.
இம்மாநிலத்தில் பாதியளவு தளர்த்தி மதுபான கடைகளைத் திறக்க அம்மாநில அரசு முடிவு செய்திருந்தது. தற்போது மணிப்பூரில் முழுமையாக மதுவிலக்கு கொள்கையை தளர்த்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஒப்புதலை மணிப்பூர் அமைச்சரவை சமீபத்தில் வழங்கியுள்ளது.
மணிப்பூரில் சட்டவிரோத கள்ளச்சாராயத்தைக் கட்டுப்படுத்த அம்மாநில அரசு மதுவிலக்கை கைவிடுவது என முடிவு செய்துள்ளதாம். மேலும் தமிழ்நாட்டில் மதுபான விற்பனை, கொள்முதலுக்கான டாஸ்மாக் நிறுவனம் செயல்படுவது போல மணிப்பூர் மாநிலத்திலும் மணிப்பூர் மதுபானங்களுக்கான அரசு நிறுவனம் MSBCL உருவாக்கப்பட்டுள்ளது.
இதனிடயே மணிப்பூரில் அரசு மதுவிலக்கு கொள்கையை கைவிட்டு டாஸ்மாக் பாணி நிறுவனம் உருவாக்கப்படுவது சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் டாஸ்மாக் மதுபான கடைகளுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவது போல் மணிப்பூரிலும் பெண்களும்,பொதுமக்களும் எதிர்ப்பு தெரிவிக்கத் தொடங்கி விட்டார்கள் என்பதுவே உண்மை.இதுகுறித்து விமர்சனங்களும் சமூகவலைதளங்களில் முன்வைக்கப்பட்டு வருகின்றன.






