தமிழகம்

டிச.25 ல் தொலைதூர ரயில்கள் மண்டபத்தில் இருந்து இயக்கம்

62views
ராமேஸ்வரத்தில் இருந்து நாளை மறுநாள் (டிச.25) கிளம்பும் தொலை தூர ரயில்கள் மண்டபம் ரயில்வே ஸ்டேஷனில் இருந்து புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் ரயில் தூக்கு பாலத்தில் பொருத்தியுள்ள சென்சார் கருவியில் இன்று அதிகாலை 2:31 மணியளவில் ரெட் அலர்ட் ஒலித்தது. இதைதொடர்ந்து, ராமேஸ்வரம்-மண்டபம் இடையே ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டன. சென்சார் கருவி செயல்பாடுகளை கண்காணிக்கும் சென்னை ஐஐடி குழுவினர் ஆய்வு செய்து ஒப்புதல் அளிக்கும் வரை ரயில்களை மண்டபத்தில் இருந்து இயக்க அறிவுறுத்தியுள்ளனர்.
இதன்படி இன்றும், நாளையும் (டிச.24) ராமேஸ்வரத்தில் இருந்து புறப்படும் தினசரி ரயில்களில் திருச்சி, மதுரை பாசஞ்சர் ரயில்களை ராமநாதபுரத்தில் இருந்து இயக்கவும், சென்னை, கன்னியாகுமரி விரைவு ரயில்களை மண்டபத்தில் இருந்து கால அட்டவணை படி இயக்கவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், டிச.25 காலை, இரவு வேளைகளில் ராமேஸ்வரத்தில் புறப்பட வேண்டிய அயோத்தி, புவனேஸ்வர், ஹூப்ளி ஆகிய வாராந்திர ரயில்கள் மண்டபத்தில் இருந்து புறப்பட்டு செல்லவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

செய்தியாளர்: காமேஷ் பாரதி, ராமநாதபுரம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!