தமிழகம்

மக்காச்சோளத்தில் படைப்புழு தாக்கத்தை தவிர்ப்பது எப்படி? என தனியார் வேளாண்மை கல்லூரி மாணவிகள் விவசாயிகளுக்கு விளக்கம்

78views
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே உள்ள தெற்கு வெங்காநல்லூர் பகுதியில் அதிகளவில் விவசாயம் நடைபெற்று வருகிறது நெல் கரும்பு மக்காச்சோளம் பருத்தி போன்ற பயிர்கள் பயிரிட்டு விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர் .  தற்போது மக்காச்சோளத்தில் படைப்புழு தாக்கம் அதிகமாக இருப்பதால் விவசாயிகள் வேதனை அடைந்து வருகின்றனர் படைப்புழு தாக்கத்திலிருந்து எப்படி மக்காச்சோளத்தை பாதுகாப்பது என்பது குறித்து தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூரில் செயல்படக்கூடிய தனியார் வேளாண்மை கல்லூரி மாணவிகள் முத்துலட்சுமி .ரஷிகா. விவசாயிகளுக்கு படைப்புகளில் இருந்து மக்காச்சோளத்தை பாதுகாப்பது குறித்து விளக்கம் அளித்தனர்.  மக்காச்சோளம் விவசாயம் செய்யும் பொழுது வெயில் அதிகமாக இருக்கும் நேரத்தில் மண்ணை உழுது விவசாயம் செய்ய வேண்டும் மக்காச்சோளத்தை சுற்றி சூரியகாந்தி , தட்டாம்பயர் போன்ற பயிர்களை பயிரிட்டு மக்காச்சோளத்தை பாதுகாக்கலாம் மேலும் மக்காச்சோளத்தை தாக்கக்கூடிய பூச்சிகளில் இருந்து இன கவர்ச்சி பொரிய பயன்படுத்தி பூச்சிகளை கொன்று அதன் மூலம் இனப்பெருக்கை தடுத்து மக்காச்சோளத்தை பாதுகாக்கலாம் என விளக்கம் அளித்தனர்.  அப்பகுதியை சேர்ந்த ஏராளமான பெண்கள் கலந்துகொண்டனர்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!