தமிழகம்

திருப்பரங்குன்றம் 16 கால் மண்டபம் முன்பு மதுரை பாஜக(OBC) ஓபிசி மேற்கு மாவட்டம் சார்பாக கட்டபொம்மன் பிறந்தநாளை முன்னிட்டு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

47views
சுதந்திரப் போராட்ட வீரர் கட்டபொம்மனின் பிறந்த நாளை முன்னிட்டு தமிழக முழுவதும் பல்வேறு இடங்களில் பல்வேறு கட்சியினர் மற்றும் அமைப்பினர் மரியாதை செலுத்தி கொண்டாடி வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக மதுரை திருப்பரங்குன்றம் 16 கால் மண்டபம் முன்பு பாஜக ஓபிசி அணி மேற்கு மாவட்டம் சார்பாக கட்டபொம்மனின் பிறந்த நாளை முன்னிட்டு பாஜகவினர் அவரது படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இந்த நிகழ்ச்சியில் மதுரை திருப்பரங்குன்றம் பாஜகவினர் மற்றும் மதுரை பாஜக ஓபிசி மேற்கு மாவட்டம் சார்பாக மாவட்ட தலைவர் வேல்முருகன்.மாவட்ட செயலாளர் வைரமுத்து, பாலசந்திரன், IT அணி கார்த்திக், வெற்றி வேல் முருகன் உள்ளிட்ட
40க்கும் மேற்பட்டோர். கலந்து கொண்டு வீரபாண்டி கட்ட பொம்மன் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!