தமிழகம்

மதுரை சோழவந்தான் ரயில் நிலையத்தில் பொதுமக்கள் மற்றும் ரயில்வே ஊழியர் இடையே வாக்குவாதம்

45views
மதுரை மாவட்டம் சோழவந்தானில் ரயில்வே மேம்பால பணிகள் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வரும் சூழ்நிலையில் பொதுமக்கள் ஒரு பகுதியில் இருந்து மற்ற பகுதிக்கு செல்வதற்கு தினந்தோறும். ரயில்வே கேட்டை தாண்டி சென்று வருகின்றனர்.  ஆனால் சோழவந்தான் ரயில்வே கேட் அடிக்கடி பழுதடைந்து சுமார் 2 மணி நேரத்திற்கு மேல் கேட் மூடி விடுவதால் பொதுமக்கள் சுமார் ஐந்து கிலோ மீட்டர் சுற்றி செல்ல வேண்டிய சூழ்நிலை உருவாகிறது இந்த நாள் பொதுமக்கள் மற்றும் ரயில்வே பணியாளர்களுக்கு இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்தது.

வழக்கம்போல். இன்றும் ரயில்வே கேட் பழுதான நிலையில் ரயில்வே கேட் ஊழியர்கள் பொதுமக்களிடம் ரயில்வே கேட் திறப்பதற்கு இரண்டு மணி நேரத்திற்கு மேல் ஆகும் என்றும் ஆகையால் எப்போதும் போல் சுற்றுச் செல்லுங்கள் என்றுகூறினார்.  ஆனால் அங்கிருந்த பொதுமக்கள் ரயில்வே கேட்டை திறந்து விட வேண்டும் அல்லது நிரந்தரமாக மூட வேண்டும் அப்பொழுதுதான் ரயில்வே மேம்பால பணிகள் விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு திறப்பார்கள் என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்கள் கூறினர்.  மேலும் மேம்பாலத்தை திறக்கும் வரை ரயில்வே கேட்டை பூட்டுமாறும் இல்லையே திறந்து விட வேண்டும் என்றும் தொடர்ந்து பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.  ஆனால் ரயில்வே கேட் ஊழியர்கள் ரயில்வே கேட்டை திறக்க முடியாது உங்களால் தெரிந்ததை பார்த்துக் கொள்ளுங்கள் என்று பேசியதால் பொதுமக்கள் மற்றும் ஊழியர்களுக்கு இடையே கைகலப்பாகும் சூழ்நிலை உருவானது.

கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேல் நடைபெற்று வரும். ரயில்வே மேம்பால பணிகளின் தாமதத்தால் ரயில்வே பணியாளர்களுக்கும் பொது மக்களுக்கும் இடையே இது போன்ற வாக்குவாதங்கள் அடிக்கடி நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.  இது குறித்து ரயில்வே ஊழியர் கூறும்போது ரயில்வே கேட்டை டாட்டா ஏசி வாகனம் இடித்து விட்டதால் ரயில்வே கேட் பழுதடைந்து விட்டதாகவும் அதனால் ரயில்வே கேட்.டை திறப்பதற்கு சுமார் 2 மணி நேரத்திற்கு மேல் ஆகும் என்றும் கூறினார்.  இந்த சம்பவத்தால் சோழவந்தான் ரயில் நிலைய பகுதி சுமார் அரை மணி நேரத்திற்கு மேல் பரபரப்பாக காணப்பட்டது.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!