தமிழகம்

தமிழகத்தில் எந்த அக்கா தம்பியும் பாஜகவை சேர்ந்த டெய்சி சரண் , திருச்சி சூரியா சிவா போல் இருக்க மாட்டார்கள் – மதுரை மாவட்ட இளைஞர் காங்கிரஸ் லெனின் பிரசாத் பேட்டி

143views
மதுரை திருப்பரங்குன்றம் தொகுதியில் அமைந்துள்ள தனக்குளம் பகுதியில் மதுரை மாவட்ட இளைஞர் காங்கிரஸ் அணி சார்பாக செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
‘கூட்டத்தில்.மதுரை காங்கிரஸ் கட்சி இளைஞர் அணியில் புதிதாக இணைந்துள்ள நிர்வாகிகள் பங்கேற்றனர்.
அவர்களுடன் இளைஞர் காங்கிரஸ் மாவட்டத் தலைவர் லெனின் பிரசாத் மற்றும் இளைஞர் காங்கிரஸ் செயலாளர் வைசாக் புதிதாக இளைஞர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினார் .
ஆலோசனை.கூட்டம் முடிந்த பின்னர் லெனின் பிரசாத் செய்தியாளர்களை சந்தித்தார்.
காங்கிரஸ் கட்சியில் கே. எஸ். அழகிரி யினால் பிரச்சினைகளை குறித்த கேள்விக்கு
இது கட்சிக்குள் இருக்கும் உட்கட்சி பிரச்சனை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியும் இது சம்பந்தமாக முடிவெடுத்துள்ளார்கள். இதை டெல்லி தலைமை தலையிட்டு ஒரு முடிவு எடுப்பார்கள், முடிவை டெல்லி தலைமைதான் அறிவிக்கும்
பாஜக மகளிர் அணி டெய்சி சரண் மற்றும் திருச்சி சூர்யா சிவா அக்கா தம்பி பிரச்சனை குறித்த கேள்விக்கு
ஒரு குறைந்தபட்ச நாகரிகம் கூட இல்லாத நிர்வாகிகளை வைத்துக்கொண்டு பாஜக ஆட்சியைப் பிடித்து விடும் தாமரை மலர்ந்தே தீரும் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்
ஒரு பெண் என்று பாராமல் காலையிலே பாஜகவை சேர்ந்த நிர்வாகி மிகவும் தரகுறைவாக ஒரு லோஃபர் எப்படி பேசுவார்களோ கண்ட கண்ட வார்த்தைகளை வாய் கூசுகின்ற வார்த்தைகளை பேசி உள்ளார் அதற்கு பூசி முழுகின்ற விதமாக அண்ணாமலையும் பேசியுள்ளார்.
இந்த பிரச்சனை குறித்து நீங்கள் விளக்கம் கேட்டிருக்க வேண்டும் எங்கள் கட்சியிலும் பிரச்சனை நடந்திருக்கிறது. நாங்கள் அதற்கான விளக்கத்தை நாங்கள் தந்து கொண்டே இருக்கிறோம் .
அக்கா ‘தம்பியுடன் சண்டை இருக்கும் அது ஒரு உணர்ச்சிபூர்வமானதாக இருக்கும் அதை உடனே வெளிப்படுத்திவிடுவர் .
இது மிகவும் பர்பஸாக செய்யப்பட்ட செயல் தொடர்ந்து அரை மணி நேரம் கொச்சையாக பேசுகிறவரை இயக்கத்தில் வைத்துக் கொண்டு பயங்கர சப்போர்ட் செய்கிறார்கள் இவ்வளவு கொச்சையாக பெண்களை பேசுகின்ற பெண்களுக்காக குரல் கொடுக்கும் இயக்கம் பெண்களுக்கு பாதுகாப்பு கொடுக்கும் இயக்கம் என்று சொல்லிக் கொள்கிறார் அண்ணாமலை.
பாஜகவை சேர்ந்த மாநில தலைவர் பதவியில் உள்ள பெண்மணிக்கே இந்த நிலை ஏற்பட்டுள்ளது இதை பூசும் விதமாக அக்கா தம்பி சண்டை என்று சொல்கிறார்கள் எந்த வீட்டிலுமே தமிழகத்திலே தம்பி இவ்வளவு கொச்சையாக பேசும் குடும்பத்தை நாம் பார்த்து இருக்க முடியாது .
பிஜேபி என்பது ஒட்டு மொத்த அயோக்கியர்களின் கூடாரம் என்று லெனின் பிரசாத் கூறினார்.
செய்தியாளர் : வி காளமேகம். மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!