தமிழகம்

குருவித்துறை குருபகவான் கோவிலில் தரிசனத்திற்கு வருபவர் களிடம் பாகுபாடு காட்டுவதாக அர்ச்சகர்கள் மீது பக்தர்கள் குற்றச்சாட்டு

50views
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே குருவித்துறை குருபகவான் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இக்கோவிலில் ஒவ்வொரு வியாழக்கிழமை அன்றும் பக்தர்கள் கூட்டம் அலைமோதும் குறிப்பாக குரு பெயர்ச்சி அன்று தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் கோவிலுக்கு பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக வந்து கலந்து கொண்டு குரு பகவானை தரிசித்து செல்வர் மேலும் ஒவ்வொரு வியாழக்கிழமை தோறும் கோவிலுக்கு வரும் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துக் கொண்டு செல்வதால்கோவிலுக்கு வரும் முக்கிய விஐபிகள் இடம் கோவிலில் உள்ள அர்ச்சகர்கள் சிறப்பு தரிசனம் என்ற பெயரில் அதிக அளவில் பணத்தைப் பெற்றுக் கொண்டு சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக பொதுமக்கள் மற்றும் பக்தர்களை காக்க வைப்பதும் விஐபிகளை கவனித்துக் கொண்டு பொது தரிசனத்திற்கு வரும் பொது மக்களை உதாசீனப்படுத்துவதுமாக தொடர்ந்து நடைபெற்று வருவதாக கோவிலுக்கு வரும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இதுகுறித்து சென்ற வியாழக்கிழமை கோவிலுக்கு சென்று வந்த பொதுமக்கள் கூறும் போது ஏற்கனவே கோவிலில் நடை திறக்கும் நேரம் மிகவும் குறைவாக உள்ளது அதாவது சாதாரண நாட்களில் மாலை ஐந்து முப்பது மணிக்கும் வியாழக்கிழமை அன்று மாலை ஆறு முப்பது மணி வரையும் கோவிலில் நடை திறந்திருக்கும் என்று நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மதியத்திற்கு மேல் வரும் சாதாரண பொது மக்களிடம் கோவிலில் உள்ள அர்ச்சகர்கள் விஐபிகளை கவனிப்பது உள்ளிட்ட வேலைகளில் இருந்து கொண்டு சாதாரண பொது மக்களிடம் பாரபட்சம் காட்டுவதாக குற்றம் சாட்டுகின்றனர் குறிப்பாக குருபகவான் வீற்றிருக்கும் சன்னதியில் உள்ள அர்ச்சகர்கள் பொதுமக்களை அரை மணி நேரத்திற்கு மேலாக காக்க வைத்து அனுப்புவதாகவும் விபதியை நீங்களே எடுத்துச் செல்லுங்கள் என்று உதாசினப்படுத்தி பேசுவதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர் இது சம்பந்தமாக அறநிலையத்துறை அதிகாரிகள் உரிய விசாரணை செய்து பொதுமக்களுக்கு ஏற்படும் சங்கடங்களை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சம்பந்தப்பட்ட அர்ச்சவர்கள் மீது கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!