தமிழகம்

விவசாயிகளுக்கு பயனுள்ள வகையில், விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில், உழவர் இதழ் கையேட்டினை மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி, வெளியிட்டார்

53views
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி, தலைமையில் நடைபெற்றது.  இக்கூட்டத்தில், மிளகாய் பயிருக்கான ஊக்கத்தொகை, காய்கறிகள் விதைகள் வழங்கக் கோருதல், ஆழ்துளை கிணறு அமைத்தல், கண்மாய் கழிவு நீர் மற்றும் செங்குத்து உறிஞ்சுக்குழி அகற்றுதல், கால்வாயை சீர்செய்தல், புதிய மேல்நிலை தொட்டி கட்டித்தர கோருதல், தார்சாலை அமைத்தல், பேவர்பிளாக் கல்சாலை மற்றும் சிமெண்ட் தொட்டி கட்டுதல், பிரதம மந்திரி குடியிருப்புத் திட்டத்தின் கீழ் வீடு வழங்குதல், குடிநீர் சுத்திகரிப் நிலையம் சரிசெய்தல், குடிநீர் வழங்குதல், மெட்டல் சாலை அமைத்தல், மயானச்சாலை அமைத்தல், ஆடு, மாடு கொட்டகை அமைத்தல்,  பழுதடைந்த மடைகளை சரிசெய்தல், பாலம் அமைத்தல், அங்கன்வாடி மையம் அமைத்தல், குடிநீர் ஊரணி கால்வாய் சுத்தம் செய்தல், குளக்கால் சீர்செய்தல், தடுப்பணை அமைத்தல், இலவச வீடு வழங்கக் கோருதல், ஊரணியை மராமத்து செய்தல், சாலை வசதி, புதுகண்மாய் தூர்வாருதல், சமுதாய கிணற்றை பயன்பாட்டிற்கு கொண்டு வருதல், நெடுஞ்சாலைத்துறை வளாகத்தை பள்ளிக்கு வழங்குதல், டாப்செட்கோ திட்டத்தில் மானியம் வழங்குதல், இலவச வீட்டுமனைப்பட்டா வழங்கக் கோருதல்,  வட்டியில்லா ஆடு, மாடு பராமரிப்பு கடன் வழங்குதல், கணினி திருத்தம் செய்தல், மானியம் விலையில் ஜே.சி.பி.இயந்திரம் வாங்க கடன் கோருதல், காப்பீட்டுத் தொகை வழங்கக் கோருதல், கதிர் அறுவடை இயந்திரத்திற்கு மானியம், வைகை ஆற்றில் இருகரைகளில் உள்ள ஆக்கிரமிப்பக்களை அகற்றுதல், வேலிக்கருவேல் மரங்கள் அகற்றுதல், அரசு நேரடி நெல்கொள் முதல் நிலையம் அமைத்தல் போன்ற உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக, மாவட்ட ஆட்சித்தலைவர் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
விவசாயிகளின் தகுதியுடைய கோரிக்கைகள் தொடர்பாக, சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் உரிய களஆய்வுகள் மேற்கொண்டு, உடன் நடவடிக்கை மேற்கொள்ளுமாறும், அவைகள் தொடர்பான மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கையினை சமர்ப்பிக்கும்படியும் மாவட்ட ஆட்சித்தலைவர், துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.  மேலும், இக்கூட்டத்தில் விவசாயிகள் எடுத்துரைத்த கோரிக்கைகள் மீது சம்பந்தப்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் தொடர்பாக துறை சார்ந்த அலுவலர்கள் புள்ளி விபரங்களுடன் விரிவாக இக்கூட்டத்தில் எடுத்துரைத்தனர்.
இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர், தெரிவிக்கையில்,  தமிழ்நாடு முதலமைச்சர் , விவசாயிகளுக்கு பயனுள்ள வகையில் எண்ணற்ற திட்டங்களை தமிழகத்தில் செயல்படுத்தி வேளாண் பெருங்குடி மக்களின் நலன் காத்து வருகிறார்கள். அதன்படி, விவசாயிகளின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றிடும் பொருட்டும், வேளாண் தொழிலை உழவர்கள் எவ்வித இடையூறு இன்றியும் தேவையான அனைத்து வசதிகளுடன் மேற்கொள்ளும் பொருட்டும், பிரதி மாதந்தோறும் விவசாயிகளுக்கான குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இக்கூட்டத்தில் விவசாயிகளின் கோரிக்கைகளின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும், புதிய கோரிக்கைகள் தொடர்பாக மனுக்கள் பெற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன்படி, சிவகங்கை மாவட்டத்திலுள்ள நீர் நிலையிலுள்ள ஆக்கிரமிப்புக்களை உடனடியாக அகற்றி பயன்பாட்டிற்கு கொண்டு வரவும், விவசாய நிலங்களை விலங்குகள் சேதப்படுத்தாமல் பாதுகாத்திடவும், தேவையான நிலங்களில் தடுப்பணைகள் ஏற்படுத்தி நிலத்தடி நீர் மட்டத்தினை பாதுகாத்திடவும், விவசாயிகளின் கோரிக்கைகளுக்கிணங்க, மாவட்;ட நிர்வாகத்தின் சார்பில் துரித நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  விவசாயிகள் அரசின் திட்டங்களின் பயன்களை முழுமையாக பெற்றிடவும், தேவையான சான்றிதழ்களை வழங்கிடவும், துறை சார்ந்த அலுவலர்கள் வாயிலாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும், நில அளவைத்துறையினர் விவசாயிகள் கோரும் அளவீட்டுப்பணியினை விரைந்து மேற்கொள்ளவும், விவசாயிகளுக்கான மின் விநியோகங்களை சீரான முறையில் வழங்கிடவும், தேவையான உரங்களை இருப்பு வைத்திடவும், கண்மாய்களில் உள்ள மடைகள், தடுப்புச்சுவர்கள் பழுதடைந்து இருப்பின் விரைந்து சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ளவும், மேலும் புதிய தடுப்பணைகள் கட்டித்தரவும், வங்கிகளின் மூலம் கடனுதவிகள் வழங்கி வேளாண் சார்ந்த புதிய தொழில் தொடங்கிட உறுதுணையாக இருந்திடவும், கடனுக்குரிய மானியத்தொகையினை தகுதி வாய்ந்த பயனாளிகளுக்கு வழங்கிட சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்து பணியாற்றிட வேண்டும் என , மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி, தெரிவித்தார்.
இக்கூட்டத்தில், விவசாயிகளுக்கு பயனுள்ள வகையில், விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில், உழவர் இதழ் கையேட்டினை மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்டார். இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் ப.மணிவண்ணன், கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர் கோ.ஜூனு, வருவாய் கோட்டாட்சியர்கள் கு.சுகிதா (சிவகங்கை), பால்துரை (தேவகோட்டை), வேளாண்மைத்துறை இணை இயக்குநர் ஆர்.தனபாலன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) சர்மிளா மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!