தமிழகம்

பெண் விவசாயி உள்பட 2 பேருக்கு ரூ.2.56 லட்சம் பொருளீட்டு கடனுதவி

65views
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வேளாண்மைத்துறை மூலம் விவசாயிகளுக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் (தேசிய நெடுஞ்சாலைத்துறை மற்றும் நிலம் எடுப்பு) எம்.ராஜசேகர் தலைமை வகித்தார். விவசாயிகளிடம் கோரிக்கை மனுக்கள் பெற்று விவசாயிகள் முன்னிலையில் விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க தொடர்புடைய அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். விவசாயிகளிடமிருந்து பெறப்பட்ட மனுக்களில் பயிர் காப்பீடு நிவாரணம் குறித்தும், வரத்து கால்வாய் சீரமைத்தல் குறித்தும், ஆக்கிரமிப்பு அகற்றுதல் குறித்த மனுக்கள் வரப்பெற்றன. இது குறித்து தொடர்புடைய அலுவலர்கள் விவசாயிகளின் கோரிக்கைகள் நிறைவேற்றும் வகையில் விரைந்து நடவடிக்கை எடுக்க மாவட்ட வருவாய் அலுவலர் (தேசிய நெடுஞ்சாலைத்துறை மற்றும் நிலம் எடுப்பு) ராஜசேகர் உத்தரவிட்டார்.

ராமநாதபுரம் விற்பனை குழு ஒழுங்குமுறை விற்பனை கூடம் மூலம் ஜோஸ்பின் அமலா, சக்திவேல் ஆகிய 2 விவசாயிகளுக்கு பொருளீட்டுக்கடன் ரூ.2.56 லட்சத்திற்கான காசோலை வழங்கினார். வேளாண்மை துறை இணை இயக்குனர் சரஸ்வதி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) தனுஷ்கோடி, கூட்டுறவுத்துறை இணை இயக்குநர் முத்துக்குமார், ராமநாதபுரம் மாவட்ட வேளாண்மை விற்பனை, வேளாண் வணிகத்துறை ஒழுங்குமுறை விற்பனை கூட செயலாளர் ராஜா மற்றும் அரசு அலுவலர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்: காமேஷ் பாரதி, ராமநாதபுரம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!