தமிழகம்

இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்களுக்கு குறைதீர் கற்பித்தல் பயிற்சி

66views
தேனி மாவட்டம்,சின்னமனூர் ஒன்றியத்தில் உள்ள இல்லம் தேடி கல்வி தொடக்க நிலை தன்னார்வலர்களுக்கு மாணவர்களுக்கு உண்டான குறைதீர் கற்பித்தல் பயிற்சி நடைபெற்றது.
சீப்பாக்கோட்டை சிஆர்சி மையத்தில் தலைமை ஆசிரியர் வளர்மதி பயிற்சியை தொடங்கி வைத்தார். இல்லம் தேடி கல்வி ஆசிரியர் இராமச்சந்திரன் சிறப்புரை ஆற்றினார்.பின்பு ஆசிரியை ரெஜினா மேரி மற்றும் ஆசிரியர் பயிற்றுநர் சாமுண்டீஸ்வரன் பயிற்சி அளித்தனர்.
இதே போல் சின்னமனூர், எரசை, சங்கராபுரம், குச்சனூர் குறு வள தன்னார்வலர்களுக்கு மேற்பார்வையாளர் சகாயராஜ் , ஆசிரியர் பயிற்றுநர்கள் முத்துப்பாண்டி,லூக்கா பாக்கிய ஜெயந்தி மற்றும் பள்ளி ஆசிரியர்கள் பயிற்சி அளித்தனர்.

பயிற்சியின் போது கட்டகத்தினை பயன்படுத்தி மாணவர்களின் கற்றல் நிலைக்கு ஏற்ப திறன்களை மேம்படுத்த பயிற்சி அளிக்கப்பட்டது.  பயிற்சியில் பங்காற்றிய அனைவருக்கும் காலை சிற்றுண்டியும் மதிய உணவும் வழங்கப்பட்டது.
செய்தியாளர். A. சாதிக்பாட்சா, தேனி மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!