தமிழகம்

சிவகாசி ஸ்ரீபத்திரகாளியம்மன் கோவிலில் கும்பாபிஷேகப் பணிகள் கோலாகலம் – கொடிமரத்திற்கு தங்கத்தகடுகள் பொருத்தி சிறப்பு பூஜைகள்

77views
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில், இந்து நாடார்கள் உறவின்முறை மகமைப்பண்டுக்கு சொந்தமான பிரசித்திபெற்ற ஸ்ரீபத்திரகாளியம்மன் கோவிலில், கும்பாபிஷேகப் பணிகள் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. கடந்த ஓராண்டாக கோவிலில் புனரமைப்பு பணிகள் நடைபெற்று வந்தன. கோவில் வளாகத்தில் உள்ள சன்னிதானங்கள் மற்றும் ராஜகோபுரம் உள்ளிட்ட அனைத்தும் புனரமைக்கப்பட்டு, வர்ணம் தீட்டும் பணிகள் நிறைவு பெற்றுள்ளன. வரும் பிப்ரவரி மாதம் 1ம் தேதி (புதன் கிழமை) ஸ்ரீபத்திரகாளியம்மன் கோவிலின் மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதற்காக கோவில் வளாகத்தில் பிரம்மாண்டமான வடிவங்களில் யாகசாலைகள் அமைக்கப்பட்டுள்ளன.

கோவிலில், ஸ்ரீபத்திரகாளியம்மன் சன்னிதானம் முன்பு அமைந்துள்ள கொடிமரத்திற்கு தங்கத்தகடுகள் பொருத்தும் பணிகள் சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக கொடிமரத்திற்கும், அதில் பொருத்தப்படும் தங்கத்தகடுகளுக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பின்னர் கொடிமரத்தில் தங்கத்தகடுகள் பொருத்தப்பட்டன. நிகழ்ச்சியில் சிவகாசி இந்து நாடார்கள் உறவின்முறை மகமைப்பண்டு நிர்வாகிகள், தேவஸ்தான நிர்வாகிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். மேலும் கோவில் கும்பாபிஷேகப் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!