தமிழகம்

சித்தையன் கோட்டை பேரூராட்சி நிர்வாக உத்தரவை காற்றில் பறக்க விடும் மீன் வியாபாரிகள்: கடும் நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

208views
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் ஒன்றியம் சித்தையன் கோட்டை பேரூராட்சி பழைய பேருந்து நிலையம் நுழைவு வாயிலில் போக்குவரத்து மற்றும் பொது மக்களுக்கு இடையூறாக நோய் தொற்று பரவும் வகையில் மீன் வியாபாரிகள் மீன் கடை அமைத்து வந்த நிலையில் சித்தையன் கோட்டை பேரூராட்சி நிர்வாகம் சார்பாக மீன் வியாபாரிகளை அழைத்து பேசியும் ஒரு சில மீன் வியாபாரிகள் நிர்வாகத்தை மதிக்காமல் மீண்டும் மீண்டும் பேருந்து நிலைய நுழைவாயிலில் மீன்கடை அமைத்து வந்தனர்.
அதனைத் தொடர்ந்து சித்தையன் கோட்டை பேரூராட்சி நிர்வாகம் சார்பாக பலமுறை சொல்லியும் கவனத்தில் எடுத்துக் கொள்ளாத மீன் வியாபாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை நோட்டீஸ் ஒட்டப்பட்டது.
அதனைத் தொடர்ந்து கடந்த சுமார் மூன்று மாதங்களாக மீன் வியாபாரிகள் பேருந்து நிலைய வளாகத்திற்குள் கடை அமைத்து வியாபாரம் செய்து வந்தனர்.
அதனைத் தொடர்ந்து தற்போது 11 12 22 இன்று கடந்த காலத்தில் குழப்பத்தை ஏற்படுத்தி வந்த ஒரு சில வியாபாரிகள் மீண்டும் பேருந்து நிலைய வளாக வாயிற்பகுதியில் பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் கடை அமைத்துள்ளனர்.  எனவே,  சித்தையன் கோட்டை பேரூராட்சியின் சிறப்பான நிர்வாகத்தையும் செயல்பாட்டையும் உத்தரவையும் மதிக்காமல்  சுகாதார சீர்கேடு ஏற்படுத்தும் வகையிலும் பொது மக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறாகவும் மீன் கடைகள் அமைத்து குழப்பத்தை ஏற்படுத்தி வரும் வியாபாரிகள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!