தமிழகம்

ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி ரயில்வே கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி தெற்கு ரயில்வே பொது மேலாளரிடம் – நவாஸ்கனி எம்பி மனு

45views
ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி ரயில்வே கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர் கே சிங்கிடம் ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் கே நவாஸ்கனி வலியுறுத்தினார்.
இது குறித்து தெற்கு ரயில்வே பொது மேலாளருக்கு நவாஸ்கனி எம்பி அளித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்ததாவது:  ராமநாதபுரம், பரமக்குடி, மண்டபம்,, விருதுநகர் மாவட்டம் நரிக்குடி மற்றும் திருச்சுழி உள்ளிட்ட ரயில் நிலையங்களில் குறிப்பிடப்பட்டுள்ள ரயில்கள் நின்று செல்ல உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். சிலம்பு விரைவு வண்டி (16181/16182) ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட திருச்சுழி சட்டமன்ற தொகுதி நரிக்குடி அல்லது திருச்சுழி ரயில் நிலையத்தில் நிறுத்தம் அறிவிக்க வேண்டும்.
ராமேஸ்வரம் – திருச்சி பயணிகள் வண்டி சூடியூர், சத்திரக்குடி, வாலாந்தரவை, மண்டபம் கேம்ப் ரயில் நிலையங்களில் நிறுத்த வேண்டும்.
கன்னியாகுமரி – ராமேஸ்வரம் விரைவு வண்டி மண்டபம், பரமக்குடி ரயில் நிலையங்களில் நிறுத்த வேண்டும்,
ராமேஸ்வரம் விரைவு வண்டி மண்டபம் ரயில் நிலையத்தில் நிறுத்த வேண்டும்,
ராமேஸ்வரம்- சென்னை சேது விரைவு வண்டி மண்டபம் ரயில் நிலையத்தில் நிறுத்த வேண்டும்.
ராமேஸ்வரம் – அஜ்மீர் (20973/20974) தொடர்வண்டி ராமநாதபுரம், பரமக்குடியில் நிறுத்த வேண்டும்,
ராமேஸ்வரம் – அயோத்தியா (22613/22614) தொடர்வண்டி ராமநாதபுரம், பரமக்குடியில் நிறுத்த வேண்டும்,
ராமேஸ்வரம் – பனாரஸ் (22535/22536) தொடர்வண்டி ராமநாதபுரத்தில் நிறுத்த வேண்டும்
என குறிப்பிடப்பட்டுள்ளது.
சென்னை- ராமேஸ்வரம் இடையே இயக்கப்படும் ரயில் பெட்டிகளுக்கு
மாற்றாக புதிய பெட்டிகளாக அமைக்க நெடு நாட்களாக கோரிக்கை வைத்து வருகின்றனர்.
சென்னை – ராமேஸ்வரம் இயக்கப்படும் ரயில் பெட்டிகளை மேம்படுத்தப்பட்ட புதிய பெட்டிகளாக மாற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ராமநாதபுரம், பரமக்குடி ரயில் நிலையங்களில் ரயில் பெட்டிகளின் அறிவிப்பு பலகைகளை சீரமைக்க வேண்டும்,
சென்னையிலிருந்து அறந்தாங்கி வழியாக காரைக்குடிக்கு விரைவு வண்டி இயக்க வேண்டும்,
சென்னையில் இருந்து காரைக்குடி வரை இயக்கப்படும் பல்லவன் விரைவு வண்டி அறந்தாங்கி வரை நீட்டிப்பு செய்ய வேண்டும் அல்லது காரைக்குடியிலிருந்து அறந்தாங்கி வரை இணைப்பு ரயில் இயக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அறந்தாங்கி வழியாக திருவாரூர், காரைக்குடி ரயில் நிலையங்களை இணைக்கும் வண்ணம் கூடுதலாக ரயில்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கொரோனா பொது முடக்க காலத்தில் நிறுத்தப்பட்ட அனைத்து ரயில்களையும் மீண்டும் இயக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ராமேஸ்வரம்- மதுரை பயணிகள் ரயிலை மூன்று முறை இயக்க வேண்டும்,
ராமேஸ்வரம்- கன்னியாகுமரி (22621/22622) இரு மார்க்கமும் உள்ளிட்ட ரயில்களை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மீட்டர்கேஜ் முறையில் இயக்கப்பட்டு வந்த ரயில்களை பிராட் கேஜ் முறையில் மாற்றப்படும்போது நிறுத்தப்பட்டிருந்த வழித்தடங்களில் மீண்டும் இயக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ராமேஸ்வரம்- கோயம்புத்தூர் இரு மார்க்கமும், ராமேஸ்வரம் – பாலக்காடு பயணிகள் வண்டி இரு மார்க்கமும், ராமேஸ்வரம் – திருச்சி இரவு நேர பயணிகள் வண்டி இரு மார்க்கமும் இயக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சென்னை – ராமேஸ்வரம், ராமேஸ்வரம் – திருப்பதி அந்தியோதயா விரைவு வண்டிகளையும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,
திருவனந்தபுரம் – மதுரை புனலூர் – பாலக்காடு ஆகிய விரைவு வண்டிகளை ராமேஸ்வரம் வரை நீட்டிப்பு செய்ய வேண்டும்,
ராமேஸ்வரம் திருப்பதி (16779/16780) விரைவு வண்டி அதிகமாக பக்தர்கள் பயன்படுத்தக்கூடிய வழித்தடமாக அளிக்கிறது.
தற்போது வாரம் மூன்று முறை இயக்கப்பட்டு வரும் இந்த வண்டியை தினசரி வண்டியாக மாற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். வாரம் ஒருமுறை இயக்கப்பட்டு வரும் ராமேஸ்வரம் – ஓகா (16733/16734) விரைவு வண்டியை வாரம் மூன்று முறை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வட மாநிலங்களிலிருந்து ராமேஸ்வரத்திற்கு இயக்கப்படும் ரயில்களை மதுரை வழியாக இயக்கினால் கூடுதல் வருவாயை ஈட்டித்தரும்.
பொது மக்களும் அதிகம் அதன் மூலம் பயனடைய முடியும். மதுரை வழியாக விரைவு வண்டிகளை இயக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்
செய்தியாளர்: காமேஷ் பாரதி, ராமநாதபுரம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!