தமிழகம்

தமிழக அரசுக்கு ‘ஹரா’ படக்குழுவினர் கோரிக்கை

82views
பெண்கள் மாதவிடாயின் போது 3 நாட்கள் விடுமுறை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வெள்ளிவிழா நாயகன் மோகன் நடித்த ‘ஹரா’ திரைப்படத்தின் மூலம் படக்குழுவினர் முன் வைத்திருந்தனர். ஹரா படப்பிடிப்பின் போது அப்போதைய தமிழக முதல்வர் மற்றும் இந்திய அரசிடம் இது தொடர்பாக முறையாக முறையிட பட்டிருந்தது.
தற்போது, இந்த முக்கியமான கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டு கேரள அரசு நடைமுறைப்படுத்தி இருக்கிறது. கேரள அரசுக்கும், முதலமைச்சர் திரு. வி. டி. சதீசன் அவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டிருக்கின்றனர் படக்குழுவினர்.
சிறந்த கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து இயக்குனர் மேல் நம்பிக்கை வைத்து அவர்களுக்கான சுதந்திரம் தந்து நல்ல படங்களை தந்த வெள்ளிவிழா நாயகன் மோகன் அவர்கள் இந்த புரட்சி கருத்துக்கும் முக்கியத்துவம் தந்து தனது ஹரா திரைப்படத்தில் வெளிப்படுத்தி அந்த கருத்து நாட்டோரால் அங்கீகரிக்கப்படுவது மிக்க மகிழ்ச்சி மிக்க நன்றி என்று தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளனர்.
பெண்கள் நலனிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் தற்போதைய தமிழக அரசும் இதை நடைமுறைப்படுத்த வேண்டும் என மீண்டும் வேண்டுகோள் விடுத்துள்ளார் இவர்கள்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!