தமிழகம்

திருமங்கலம் அருகே ரயில்வே துறை நிர்வாகத்தின் அலட்சியப் போக்கால், சுரங்கப்பாதையில் கழிவு நீர் தேக்கம் – வாகன ஓட்டிகள் அவதி – நோய் தொற்று பரவும் அபாயம்

169views
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே வடகரை கிராமத்திற்குச் செல்லும் பாதையில், ரயில்வே சுரங்கப்பாதை அமைக்கப்பட்டு நான்கு ஆண்டுகளுக்கு மேலாகி அந்த சுருங்கப் பாதையில் ,  அவ்வப்போது மழை நீரும், கழிவு நீரும் தேங்கி நிற்பதால் செல்ல வழி இன்றி , வெள்ளம் போல் கழிவுநீர் சுரங்கப்பாதையில் தேக்கமடைந்துள்ளது. இதனால் அவ்வழியே செல்லக்கூடிய வாகன ஓட்டிகள் ,பெரும் அவதிக்கு ஆளாகி வருவதுடன் , நோய் தொற்று பரவும் நிலையும் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து இரண்டு மாதங்களுக்கு மேலாகியும் ரயில்வே துறையிடம் அப்பகுதி கிராம மக்கள் முறையிட்டும், ரயில்வே துறை அலட்சியப் போக்கில் இருப்பதாக கிராம மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.நோய் தொற்று பரவும் முன்னர், ரயில்வே துறை சுரங்கப்பாதையில் தேங்கியுள்ள கழிவுநீரை அப்புறப்படுத்த வேண்டும் என அரசுக்கு கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!