தமிழகம்

மதுரை அருகே நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் திமுக வினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால அடிப்படை வசதிகள் பற்றி பேச வந்த பொதுமக்கள் வேதனை –

94views
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியம் மேலக்கால் ஊராட்சிக்குட்பட்ட கீழ மட்டையான் கிராமத்தில் நடந்த கிராமசபை கூட்டத்தில் திமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அடிப்படை வசதிகள் குறித்து கருத்து தெரிவிக்க முடியாமல் பொதுமக்கள் வேதனை அடைந்தனர் ஆளுங்கட்சியனர் முறை கேட்டில் ஈடுபடுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியம் மேலக்கால் ஊராட்சிக்கு உட்பட்ட கீழ மட்டையானில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊராட்சி மன்ற தலைவர், துணைத் தலைவர் செயலர் ஒன்றிய கவுன்சிலர் வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டு காலை 11 மணி அளவில் கிராம சபை கூட்டம் தொடங்கியது. கூட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே திமுகவினர் ஒருவரை ஒருவர் வார்த்தைகளால் தாக்கி பேசிக் கொண்டனர். இதனால் கிராம சபை கூட்டத்திற்கு வந்த பொதுமக்கள் தங்கள் பகுதியில் அடிப்படை வசதிகள் குறித்து கருத்து தெரிவிக்க வந்த நிலையில் ஆளும் கட்சியினரின் வார்த்தை மோதலால் செய்வதறியாது திகைத்து நின்றனர். மேலும் பொதுமக்கள் என்ற போர்வையில் ஆளும்கட்சியினரே ஒருவரை ஒருவர் தாக்கி பேசியதால் பாதுகாப்பு பணிக்கு வந்த போலீசாரும் செய்வதறியாது திகைத்து நின்றனர். தொடர்ந்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அடிப்படை தீர்மானங்கள் மற்றும் 3 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு கூட்டம் சிறிது நேரத்திலேயே முடிவடைந்தது. தங்கள் பகுதி குறைகளை தெரிவிக்க வந்த பொதுமக்கள் காலம்கட்சியினரின் வார்த்தை மோதலால் என்ன செய்வதென்று தெரியாமல் புலம்பியபடியே சென்றது அங்கிருந்தவர்களை வேதனைக்கு உள்ளாக்கியது .
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!