இந்தியா

திருவனந்தபுரத்தில் நடைப்பெற்ற, கேரளா மாநில மாற்றுத்திறனாளிகளின் மாநில மாநாடு

156views
எபிலிட்டி மிஷன் கேரளா மற்றும் இன்டாக் இணைந்து நடத்திய கேரளா மாநில மாற்றுத்திறனாளிகளின் மாநில மாநாடு திருவனந்தபுரம் தம்பாநூரில்  காந்தி ஸ்மார்க்க நிதியில்  நடைப்பெற்றது.
ஒரு நாள் நடந்த இந்தக் கருத்தரங்கில் இயலாமை உரிமை இயக்க தலைவர் முனைவர் எப். எம் .லாசரஸ் மற்றும் அவர் குழுவினர் அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்தனர்.  மாண்புமிகு நீதியரசர் ஹரிஹரன்,பேராயர் ராபின்சன் டேவிட் லூதர், முனைவர் வி .பி .மவுலானி, முனைவர் பி.டி. பாபுராஜ், சகோதரி தும்பி சூரியன் மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

 

கருத்தரங்கின் முதல் பகுதியாக வயநாடு பேரிடருக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. அரசுக்கு பரிந்துரை செய்யப்பட வேண்டிய முக்கிய விஷயங்கள், மற்றும் மாற்றுத்திறனாளி முன்னேற்றத்திற்காக செய்ய வேண்டிய செயல்களை பங்கு பெற்றவர்கள் பட்டியலிட்டனர்.

தமிழ்நாட்டிலிருந்து கன்னியாகுமரி மாவட்டத்தை சார்ந்த சமூக சேவகர்- மருத்துவர். தி.கோ. நாகேந்திரன், சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு கூறுகையில், நமது இந்திய அரசு சாசனப்படி அனைவருக்கும் அனைத்து உரிமைகளும் வாய்ப்புகளும் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே மாற்றுத்திறனாளிகளுக்கு முழுமையாக அவர்கள் செய்யக்கூடிய செயல்களுக்கு தக்க வாய்ப்புகள் கொடுக்கப்பட வேண்டும். மனிதர்களாகிய நாம் மனிதநேயத்தோடு அனைவரையும் அணுகுவது சிறப்பு. நாளை எவர் வேண்டுமானாலும் மாற்றித்திறனாளிகளாகலாம். எனவே கண்ணிருந்தும் காணாதவராக, காதிருந்தும் கேளாதவராக, அனைத்து அவயங்களும் சிறப்பாக இருந்தும் திறம்பட நல்ல காரியங்களுக்கு செயல்படுத்தாமல் இருப்பதை இறைவன் ஏற்றுக் கொள்ள மாட்டார். எனவே நாம் மனிதநேயத்தோடு அனைவரும் வாழ்வாங்கு வாழ வழி செய்வோமாக. கற்போம் கற்போம் மாற்றுத்திறனாளிகளை மேம்படுத்த கற்போம், கற்போம் மாற்றுத்திறனாளிகளின் வாய்ப்பையும் உரிமைகளையும் பாதுகாக்க கற்போம்’ என்று கூறினார் .

சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.
இந்த கருத்தரங்கில் பல்வேறு துறை சார்ந்த உயர் அதிகாரிகள் பலர் கலந்துக் கொண்டனர்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!