தமிழகம்

கீழக்கரை நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்திற்கு தமிழக அரசு 211கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளதாக நகர்மன்றத் தலைவர் தகவல்

79views
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சிக்கு உட்பட்ட 21 வார்டுகளின் பொது மக்களின் குடிதண்ணீர் தேவைக்காக தமிழக அரசு 211 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளதாக கீழக்கரை நகர்மன்ற தலைவர் செஹானாஸ் ஆபிதா தெரிவித்துள்ளார். மேலும் இத்திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்த தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கும் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே என் நேரு அவர்களுக்கும் இதற்கு உறுதுணையாக இருந்த ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் சட்டமன்ற உறுப்பினர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார்.
மேலும் இந்நிகழ்வின் போது நகராட்சி பொறியாளர் அருள் மாணவர் அணி அமைப்பாளர் இப்திஹார் ஹசன் ஏழாவது வார்டு நகர் மன்ற உறுப்பினர் மீரான்அலி ஒன்பதாவது வார்டு நகர மன்ற உறுப்பினர் நஸ்ருதீன் 14 வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் முகமது ஹாஜா சுகைபு அனைத்து சமுதாயக் கூட்டமைப்பு இருபதாவது வார்டு நகர்மன்ற உறுப்பினர் சேக் உசேன் 21 வது வார்டு நகரமன்ற உறுப்பினர் சித்திக் ஆகியோர் உடன் இருந்தனர்.
செய்தியாளர் சந்தோஷ் சிவம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!