தமிழகம்

கீழக்கரை முஹமது சதக் பாலிடெக்னிக்கல்லூரி விளையாட்டு விழா

79views
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை முஹமது சதக் பாலிடெக்னிக் கல்லூரியின் 43 ஆம் ஆண்டு விளையாட்டு விழா நடந்தது. முதல்வர் அலாவுதீன் தலைமை வகித்தார். விரிவுரையாளர் பாலசுப்ரமணியன் வரவேற்றார்.
உடற்கல்வி இயக்குநர் மருதாசலமூர்த்தி அறிக்கை வாசித்தார். துணை முதல்வர் ஷேக் முஹமது சிறப்புரையாற்றினார். பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ராமநாதபுரம் தலைமையிடத்து காவல் கூடுதல் எஸ்பி அருண் பரிசு வழங்கினார். மெக்கானிக்கல் துறை விரிவுரையாளர் சோமசுந்தரம் நன்றி கூறினார்.
போட்டிக்கான ஏற்பாடுகளை உடற்கல்வி இயக்குநர், உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் பல்வேறு துறை விரிவுரையாளர்கள் செய்தனர்.
செய்தியாளர்: காமேஷ் பாரதி, ராமநாதபுரம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!