தமிழகம்

குமுளி – வாழையார் RTO செக் போஸ்ட்களில் லஞ்சம் – நடவடிக்கை எடுக்குமா கேரளா அரசு? – காயல் அப்பாஸ்

163views
மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.
தமிழகத்திலிருந்து செல்லும் டூரிஸ்ட் வாகனங்களுக்கு கேரளா எல்லையான குமுளி – வாழையார் RTO செக் போஸ்ட்களில் தமிழக வாகனங்கள் கேரளா உள்ளே செல்வதற்கு வாகன ஒட்டிகளிடம் அரசு அதிகாரிகள் லஞ்சம் வாங்கி கொண்டு உள்ளே செல்ல அனுமதி அளித்து வருகின்றனர். கேரளா RTO செக் போஸ்ட்களில் உள்ள அதிகாரிகள் கேட்கும் பணத்தை தமிழக வாகன ஒட்டிகள் தர மறுத்தால் வாகங்களை உள்ளே செல்ல அனுமதிக்க முடியாது என்று மணி கணக்கில் காத்திருக்க வைக்கின்றனர். இதனால் கேரளாவுக்கு சுற்றுலா செல்லும் பயணிகள் மற்றும் சபரி மலைக்கு செல்லும் பக்தர்களும் மன உலைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர். ஆகவே கேரளா எல்லை பகுதியான குமுளி – வாழையார் RTO செக் போஸ்ட்களில் கேரளா லஞ்சம் ஓழிப்பு காவல் துறையினர் ரகசியமாக கண்காணித்து சோதனை செய்ய வேண்டும் என மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி வலியுறுத்துகிறது.
கேரளா மாநிலத்தில் மிகவும் சிறப்பாக மக்களுக்கான ஆட்சி செய்து வரும் மாண்பு மிகு முதல் அமைச்சர் பிரணாய் விஜயன் அவர்களின் நற் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் RTO செக் போஸ்ட்களில் உள்ள அரசு அதிகாரிகள் லஞ்சம் வாங்கி வருவது மிகுந்த வருத்ததை தருகிறது.எனவே கேரளா RTO செக் போஸ்ட்களில் தமிழக டூரிஸ்ட் வாகன ஒட்டிகளிடம் லஞ்சமாக பணம் வசூல் செய்து வரும் அரசு அதிகாரிகள் மீது எந்த விதமான பாரம் பட்சம் பார்க்காமல் கடும் நடவடிக்கையை உடனடியாக எடுக்க வேண்டும் என கேரளா அரசை மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி சார்பாக வலியுறுத்தி கேட்டு கொள்கிறோம். இவ்வாறு காயல் அப்பாஸ் கூறியுள்ளார்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!