கவிதை

பூத்து சிரித்தது மொழிகளின் மலர்

251views
உன்
செல்ல சொல்லில்
பூத்து
சிரித்தது மொழிகளின்
மலர்
பூமியில்
வெண் ஒளியாய் நிறம்
பதித்த
இளம் மஞ்சள்
நிலா
நீ கடவுள்
எழுதிய குறுங்கவிதையின்
உயிர்
ஹைக்கூவின்
தொடர்
செல்லமாய்
கன்னம் திருடும் முத்தங்களின்
முதல்வி
மழலைகளின்
அரசி
கருவறை
தேசத்தின் ஆனந்த சுதந்திரம்
நெஞ்சில்
சாய்ந்த தேவதையின்
பிம்பம்
தாய்மை
பரிசளித்த வாழ்வியலின்
முதன்மை
சீதனம்
பொம்மைகள்
ஆளும்
குழந்தைகளின் இளவரசி
அம்மாவின்
மகாராணி
இருள்
புதைத்து இன்பம் திறக்கும்
குடும்பத்தின்
தலைவாசல்
குழந்தைகளின் பூ…
கவிஞர் பாக்கி

Right Click & View Source is disabled.

error: Content is protected !!