423views
புத்தரிசி
பொங்கலில் வெண்மையாய் பொங்குது
வாழ்வு
பொங்கல்
உள்ளங்களே உழவனின் அகம் சுவைக்க
சொல்லுங்கள்
பொங்கலோ பொங்கல்
புலர்ந்த
சூரிய கதிர்களில் பொங்கி
ஒளிர்கிறது
பொங்கல்
திருநாள் வெளிச்சம்
காலத்தின்
தோரணையில் மஞ்சள் நிறம்
படர்ந்து
இயற்கையின்
உதட்டில் பூசணிப்பூ பதித்து வாழ்வெங்கும்
வருகிறது
தைத்திருநாள் புன்னகை
கரும்பின்
இனிப்பில் பொங்கி வழிகிறது
மங்காத
நல்வாழ்வின் தைச்சுவை
தை
உழவர் திருநாள் தமிழர்
பெருநாள்
தை
துன்பத்தை நறுக்கி மகிழ்வை
தை
கும்மி குலவை
சத்தத்தில் பின்னி பிணையும்
பொங்கல்
சத்தத்தின் தை ஒலி
பச்சரிசி
நெல்லு ஈரங்களின் முத்தம்
உழவரின்
வயிற்றில் வற்றாத பசுமை
பண்டிகை
கையில் தைமகளின் தீபம்
ஆவினம்
நினைவு கூர்ந்து மனம் ஆலாபனை
தூவும்
இனிய
பொங்கலில் இயற்கைக்கு நன்றி
சொல்லி
இனியவன்
கவிதையில் பொங்கல் வைக்கிறேன்
பொங்கலோ பொங்கல்…
கவிஞர் பாக்கி
add a comment