கவிதை

தாகம் கொண்ட நதி

282views
தீராத தாகம் கொண்ட நதி
தடைதாண்டி செல்கிறது
செல்லும் இடம் அறியாது
சென்ற இடமெல்லாம் வழியாக…
பள்ளம் கண்டு பாய்ந்தும்
மேடுகண்டு தேக்கம் கொண்டு
சிறுதுளி பெருவெள்ளமாய்
முட்டி மோதி…
அணுக்களின் இணைப்பா…?
ஆவேசம் கொண்ட சீற்றமா..?
முட்டி மோதி விரைகின்றது
மனச் சஞ்சலம் கொண்டு
இருட்டறையில் ஒர் வாழ்க்கை
எவ்வழி செல்வது என்று அறியாமலே
தேடுதல் தொலைத்து
தேங்கி நிற்பது அழகா…
குட்டையாக நிற்பது அழகா…?
நதிகள் தேங்குவதில்லை
இளைஞனே!! தேங்குவதேனோ…?
தேடல்கள் வாழ்வியலாகும் போது
வழிகள் வசந்தத்தை வரவேற்கும்…
நதிப் பிரவாகமாய்…
கவிஞர் பாலசந்தர்
மண்ணச்சநல்லூர்

2 Comments

Leave a Reply to Jayasankar Venkat Cancel reply

<p>Right Click & View Source is disabled.</p>
error: Content is protected !!