16views
அத்தாவுல்லா
நாகர்கோவில்
மிகச் சாதாரணமாக
நினைத்து விட்டீர்கள்
மற்றவர்
சங்கறுக்கும் சங்கதிகளை…
உயிரோடு இருப்பவர்களை
உயிரற்றவர்களாகக் காட்டியும்
உங்களுக்குத் தேவையெனில்
இறந்தவர்களை உயிர்ப்பித்தும்
தேர்தல் களத்தில்
அகோரப்போர் நடத்திக்காட்டி
இருக்கிறீர்கள்…
சங்கறுப்பு என்பது
சங்கிகளுக்குத்தான் பழக்கம்…
சர்க்கார் அதிகாரிகளுக்கு
அல்லவென்று நினைத்த மக்களின்
சர்வ நாடிகளையும்
திகைக்க வைத்து மீண்டும்
தெம்பூட்டி இருக்கிறது
இளைஞர்களின்
புள்ளி விவரக்கணக்குகள்..
சொல்லும்படி சொன்னால்
உங்கள் சக்கர வியூகங்களில்
வீர வேடம் போட்டு
நீங்கள் அனுப்பிவைத்த
உங்கள் கோழைக்கோமாளி
அகப்பட்டுக் கொண்டான்…
அபிமன்யுவுக்காவது
அர்ஜுனன் மகன் என்ற
கௌரவம் இருந்தது…
பகடைகளிலும்
சூதுகள் சூழ்ச்சிகள்
கவராடுதல்களிலும்
மற்ற பெண்களின்
தாவணிப் பாவாடைக்
கவர்ந்தாடுதல்களிலும்
களங்கப்பட்ட உங்களுக்கு
அந்த மரியாதையும் இல்லை…
நீங்கள் உருட்டிய பகடைகளே
உங்களுக்கு எதிராகத் திரும்புகின்றன…
பாரதத்தில் ஒரேயொரு
சகுனி தான்…
உங்கள் கூட்டத்திலோ
ஒவ்வொருவரும்…
சதி – பகடையில் இல்லை…
ஆளுக்கு ஆள்
மாற்றி மாற்றி ஆடிய
உங்கள் ஆட்ட
வியூகங்களில்தான்..
இப்போது பகடைகள் மட்டுமல்ல…
தர்மசக்கரமும் இளைஞர்கள் கையில்…
இனி நீங்கள் எளிதாக
தப்பித்து விட முடியாது.
add a comment






