கவிதை

காந்தி ஜெயந்தி வாழ்த்து!

27views
கவிஞர் சேலம் சங்கர் எம்.ஏ.,
சத்தியம் காந்தி தத்துவம் – அந்த
உத்தமர் வேதப் புத்தகம்!
அகிம்சை நெறிகண்ட வித்தகர்
அகிலம் போற்றுகின்ற உத்தமர்!
நர்மதைக் கரையில் உதித்தார் – காந்தி
அகிம்சை ஊற்றாக!
நலிவினைப் போக்கிடத் திளைத்தார் காந்தி
தென்றல் காற்றாக!
சுதந்திர உணர்வை நட்டார் – அம்மா
மனத்தில் நாற்றாக;
அடிமை நீக்கிட எழுந்தார் – அம்மா
கொடிய காற்றாக!
மெலிந்தும் நலிந்தும் இருப்பார் – அந்தோ
பூஞ்சை உடலாக
அதர்மம் கண்டதும் எழுவார் – அடடா
பொங்கும் கடலாக
சத்தியா கிரகத்தை திரித்தார் – காந்தி
நீண்ட வடமாக;
பாரதத் தேரை இழுத்தார் – அண்ணல்
நெஞ்சில் திடமாக

Leave a Response

Right Click & View Source is disabled.

error: Content is protected !!