கவிதை

எழுத்தறிவித்தல்

40views
அத்தாவுல்லா
நாகர்கோவில்
கொடுத்தலின் வாழ்க்கை
தூய்மையானது மேன்மையானது…
உயர்ந்தோர் முன் வரிசை…
இரக்கத்தின் இன்னொரு வீடு…
யார்எவர் எனும் பேதம் பார்க்காமை…
தொட்டனைத் தூறும் மணற்கேணி…
எவரென்றாலும்
மானுட சமூகம்
பயன்பெறத்தக்கவை எல்லாம்
மகத்தானக் கொடைகள்தான்…
எப்போதும் முல்லைத் தேர்தான்
என்றில்லை
மயில் போர்வைகள்
என்றில்லை…
குடிக்கும் ஒரு மூடர் நீர்
வேனல் காலத்தில்
அமிர்தப் பிரவாகம்…
மூன்றுநாள் பசிக்காரனுக்கான
ஒருவேளை உணவு
தேவலோக அமுதினும் மேலானது…
தொலைந்து விட்டது போல்
கையறு நிலையில்
இருப்பவனுக்குத் தரும் கல்வி
காணாமல் போன ஒட்டகங்கள்…
கடும்பாலை வெளிகளில்
கண்டெடுக்கப்படுவது போல
இருண்மை உணர்வுகளை
வெளிச்சம் பெற வைக்கும் விடியல்…
கைகூப்பித் தொழ வேண்டியவனை
கைகூப்பித் தொழ வைக்கும் கண்ணியம்…
காலடியில் போட வேண்டிய
கல் மண் களிமண் பிம்பங்களை
அடையாளம் காட்டும் அற்புதம்…
முடைப்புதர்கள் முட்காடு தகர்த்து
கருவேலம் எருக்கிலை
வெட்டிச் சீராக்கும்
சுற்றுப்புறச் சூழல்
சமுதாயப் புரட்சி…
உள்ளத்தின் அழுக்கவிக்கும்
ஆன்ம மந்திரம்…
எழுத்தறிவிக்கும் இன்பம்… உலகம் ஒரு படி
மேலெட்டும் உவகை…

 

Leave a Response

Right Click & View Source is disabled.

error: Content is protected !!